எல்லையில் படைகளை குவித்துள்ள விவகாரத்தில் 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு, உக்ரைன் கெடு விதித்துள்ளது.

world war

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ரஷியாவுக்கு, உக்ரைன் `கெடு’ விடுத்துள்ளது. ஆனால் ரஷியா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனவே உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என 12-க்கும் அதிகமான நாடுகள் தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

மேலும் ஜப்பான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள், தங்கள் தூதரக அதிகாரிகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளன. இதனால் படையெடுப்பு குறித்த அச்சம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்நிலையில் இந்த நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கு 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷியாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மேலும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளையும் உக்ரைன் அழைத்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரி குலேபா கூறுகையில், “எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விளக்க வேண்டும் என்றும் நாங்கள் அலுவல்பூர்வமாக விடுத்த வேண்டுகோள்களை ரஷியா புறக்கணித்து விட்டது. இந்த விவகாரத்தில் ரஷியாவின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த அடுத்த 48 மணிநேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுப்பதே பொருத்தமான நடவடிக்கை ஆகும்” தெரிவித்தார்.

இச்சூழ்நிலையில் தொடர்ந்து பேசிய அவர் “மற்ற நாட்டை அச்சுறுத்தும் வகையில், தங்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடாது என்ற, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறை குறித்து ரஷியா அக்கறை கொள்ளுமானால், நெருக்கடியை மட்டுப்படுத்துவதற்காகவும், அனைவருக்குமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், ராணுவ வெளிப்படைத்தன்மை குறித்த தன் கடமையை அந்த நாடு நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும் இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சுமார் 1 மணி நேரம் உரையாடினார். அதனைத்தொடர்ந்து ஜி7 நாடுகள் எச்சரிக்கை விடுத்தார்.  அப்போது இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆதரவை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்தினார். அதை தொடர்ந்து பதற்றத்தை தணிக்கும் விதமாக ஜோ பைடன் உக்ரைனுக்கு வர வேண்டும் என அவருக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இதற்கிடையில் உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் மிகவும் தெளிவாக உள்ளன என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போருக்காக ரஷியாவில் தீவிரமான தயாரிப்புகள் உள்ளன என்பதைக் காட்டும் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  இது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இது ஒரு புறமிருக்க ரஷியா உக்ரைன் மீது படையெடுத்தால் அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ‘ஜி7’ நாடுகளின் நிதி மந்திரிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.