கொக்கா மக்கா.. 10 முறை கல்யாணம் செய்து திருப்தி இல்லாததால் விவாகரத்து செய்த பெண்.. 11 வது கல்யாணத்துக்கு போட்ட கன்டிஷசன் என்ன தெரியுமா?!
By Aruvi | Galatta | Oct 30, 2020, 06:22 pm
10 முறை கல்யாணம் செய்து திருப்தி இல்லாததால் அனைத்து கணவன்கைளயும் விவாகரத்து செய்த பெண் ஒருவர், 11 வது கல்யாணத்துக்கு கன்டிஷசன் போட்டு, தன்னை தயார் படுத்தி வரும் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயது பெண் கேசி என்பவர் தான், இப்படி ஒரு கல்யாண பந்தத்தில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயது கேசி என்ற பெண், தனது முதல் கணவரைத் திருமணம் செய்த நிலையில், அவருடன் 8 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனால், அது தான் அவர் அதிக பட்சமாக வாழ்ந்த திருமண வாழ்க்கை ஆகும். ஆனால், தனது முதல் கணவருடன் 8 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து அவருக்கு போர் அடித்து உள்ளது. இதனால், அவரை விவகாரத்து செய்து விட்டார்.
அதன் தொடர்ச்சியாக, அவர் 2, 3, 4 என்று தொடர்ச்சியாக மொத்தம் 10 கல்யாணம் செய்து உள்ளார். அதில் ஒரு கணவரோடு மட்டும் குறைந்த பட்சமாக 6 வருடங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார். இப்படியாக ஒவ்வொரு கல்யாணத்திற்குப் பிறகும், சில காலங்கள் வாழ்ந்து விட்டது, அந்த கணவர்களைத் தொடர்ச்சியாக விவாகரத்து செய்து வந்து உள்ளார். தற்போது வாழ்ந்து வந்த தனது 10 வது கணவனிடம் இருந்தும், சமீபத்தில் அந்த பெண் விவாகரத்து பெற்று உள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய 56 வயது பெண் கேசி, “எனது திருமண வாழ்க்கையைப் பார்க்கும் போது, பலருக்கும் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதில் எவ்வளவு வலி இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என்றும், குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “எனது அடுத்த திருமணத்திற்காக ஒரு கன்டிஷனையும் நான் தற்பொது போட்டுள்ளேன்” என்று கூறியுள்ள கேசி, “என்னை மட்டுமே நேசிக்கும் ஒருவர் தான் எனது வாழ்க்கையில் வரும் வரை தனது திருமணத்தை நிறுத்த போவதில்லை” என்றும், தெரிவித்து உள்ளார்.
மேலும், “10 திருமணங்கள் எனக்கு வரிசையாகத் தோல்வியைத் தந்தாலும், எனக்கான துணை கிடைக்கும் வரை நான் திருமணம் செய்வதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்” என்றும், கேசி கூறி உள்ளார்.
“ஒரு கணவரிடம் இருந்து எப்படி விவாகரத்து பெற்றுக் கொள்வேன்?” என்பதற்குப் பதில் அளித்துள்ள கேசி, “ஒரு கணவனுடன் வாழும் போது இனி மேல் இந்த திருமண வாழ்க்கையைத் தொடர முடியாது எனத் தோன்றினால் அது குறித்து கணவனிடம் பேசி விட்டு, அதன் பிறகு விவாகரத்து பெற்றுக் கொள்வேன்” என்றும், கேசி தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, 10 முறை கல்யாணம் செய்து திருப்தி இல்லாததால் அனைத்து கணவன்கைளயும் விவாகரத்து செய்து, 11 வது கல்யாணத்துக்கு கன்டிஷசன் போட்டு கேசி அளித்துள்ள இந்த பேட்டி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணைய வாசிகள் பலரும், இந்த பேட்டியைப் பகிர்ந்து வருகின்றனர்.