“ரஷியா முன்னேறி வருவதை தடுக்க” பாலத்தில் தனக்குத்தானே குண்டு வைத்து வெடிக்கச் செய்த உக்ரேனிய வீரர்!
“ரஷியா முன்னேறி வருவதை தடுக்க உயிர் தியாகம் செய்யும் விதமாக” அந்நாட்டில் உள்ள ஒரு பாலத்தில் உக்ரேனிய வீரர் ஒருவர் தனக்குத்தானே குண்டு வைத்து வெடிக்கச் செய்து, பாலத்தை உடைத்த சம்பவம், நெஞ்சை நெஞ்சை உலுக்கும் விதமாக அமைந்து உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும், உக்ரைன் தான் தற்போது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தழி வருகின்றன. அதன்படி, முதல் நாளான நேற்று முன் தினம் ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தியது. இதில், உக்ரைன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் பாதுகாப்பு படையினர் குற்றம்சாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று 2 வது நாளாகவும் போர் நீடித்து வந்த நிலையில், “ரஷியா தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பீரங்கிகள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்” என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது “உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்து உள்ளோம்” என்று, ரஷியா கூறி இருக்கிறது.
சற்று முன்னதாக கூட, “8 உக்ரைன் கடற்படை கப்பல்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், உக்ரைன் நாட்டின் மெலிட்போல் நகரை ராணுவம் கைப்பற்றி இருப்பதாகவும்” ரஷ்ய ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக, அங்குள்ள கிரிமியாவிலிருந்து ரஷியப் படைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் விதமாக, உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே வெடி வைத்து, வெடிக்கச் செய்துள்ள சம்பவம், அந்நாட்டில் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அதாவது, கெர்சன் பிராந்தியத்தில் இருக்கும் ஹெனிசெஸ்க் பாலத்தில் ரஷிய டாங்கிகளின் வரிசையைத் தடுக்கும் விதமாக, துணிச்சலாக செய்ல்பட்டு உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர், தனது உயிரை கொடுத்து வீர மரணம் அடைந்திருக்கிறார்.
தனது நாட்டிற்காக தனது உயிரை கொடுத்து தியாகம் செய்த உக்ரைன் நாட்டு வீரரின் பெயர் விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் என்பவர் ஆவர்.
இது தொடர்பாக அந்நாட்டு ஜெனரல் ஸ்டாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவில், “ரஷியாவை தடுப்பதற்கான ஒரே வழி தனது நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு பாலத்தை தகர்ப்பதுதான் என்று பட்டாலியன் முடிவு செய்தார் என்றும், ஸ்காகுன் வோலோடிமிரோவிச் தப்பிக்க நேரமில்லை என்பதால், அவர் தனது தோழர்களிடம் தன்னை தானே வெடிக்க வைக்கப் போவதாக” கூறினார், என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
அப்போது, “அவர் தனக்கு தானே வெடி வைத்து அந்த பாலம் வெடிக்கும் சத்தம் கேட்டது” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அதன் படி, ரஷிய ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவை, உக்ரைனின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தின் அருகே ரஷிய ராணுவ வீர்ரகளின் மரணத்தை உக்ரைனின் ஆயுதப்படைகள் தற்போது உறுதி செய்து உள்ளன.
இது குறித்து ஆயுதப்படை அதிகாரி ஒருவர் பேசும் போது, “வோலோடிமிரோவிச் பாலத்தில் வெடிபொருட்களை வைக்க முன்வந்த பிறகு அதை வெடிக்கச் செய்ய முடிவு செய்து உள்ளார் என்றும், இதனால் அந்த பாலம் அப்படியே துண்டானது” என்றும், கூறியுள்ளார்.
ஆனால், “பாம் வைத்து வெடிக்க செய்த நபரால், அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
முக்கியமாக, அந்த உக்ரைன் ராணுவ அதிகாரியின் இந்த முயற்சியே, ரஷியர்களை பிந்தங்க செய்து உள்ளது” என்றும், அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
“ரஷிய துருப்புக்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட, அதிக எதிர்ப்பை சந்திக்கின்றன” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, ரஷியா முன்னேறி வருவதை தடுக்கும் விதமாக, உக்ரேனிய வீரர் ஒருவர் தனது நாட்டில் எல்லையில் உள்ள பாலத்தில் தன்னைத்தானே குண்டு வைத்து வெடிக்கச் செய்த நிகழ்வு, உலக மக்களின் நெஞ்சங்களில் கடும் ரணங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், நெஞ்சையும் பதைபதைக்க செய்துள்ளது.