“ரஷ்யாவும் - ஐஎஸ் தீவிரவாதிகளும் ஒன்றுதான் என்றும், ரஷ்யா போரை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.நா. சபையை மூடிவிலாம்” என்று, ஐ.நா. மன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுப்பி உரை ஆற்றியது, உலகம் முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது.

ரஷியா - உக்ரைன் போர் இன்றுடன் 42 வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. 

அந்த வகையில், உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன.

இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்கள் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முக்கியமாக, உக்ரைன் நாட்டின் குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் தாக்கப்பட்டு, எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. இதில் முக்கியமாக, உக்ரைனில் புச்சா நகரில் அங்குள்ள அப்பாவி பொது மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு உள்ள படுகொலைகளால், அந்த சாலைகள் முழுவதும் பொதுமக்களின் சடலங்கள் கிடப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, உலகம் முழுவதும் நெஞ்சை பதைபதைக்க செய்தது.

இந்த நிலையில் தான், “ரஷ்ய போர் குற்றம் புரிந்து வருவதால், ரஷ்ய ராணுவத்தை சர்வதேச நீதி அமைப்பு முன்பு நிறுத்தமுடியாமல் போனால் இனி ஐக்கிய நாடுகள் சபையை இழுத்து மூடிவிட்டு செல்வதே சிறந்த முடிவு” என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா.சபையிலேயே மிகவும் ஆவேசமாக பேசி உள்ளார்.

அதாவது, உக்ரைன் நாட்டின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவம், நிகழ்வு உலகம் முழுவதுமாக மிக பெரிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 

இது குறித்து, ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன்னதாக எழுச்சி உரை ஆற்றினார். 

அப்போது பேசிய அவர், “2 ஆம் உலக போருக்கு பிறகு, உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கொடூர போர் குற்றத்தை புரிந்து வருவதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அத்துடன், “எங்கள் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகளில் தங்கியிருந்த அப்பாகி பொது மக்கள் கொல்லப்பட்டதோடு, கார்களில் சென்றவர்கள் பீரங்கிகளால் காரோடு நசுக்கப்பட்டு, பச்சை படுகொலை செய்யப்பட்டதாகவும்” பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “ரஷ்ய ராணுவத்திற்கும் - ஐ.எஸ் தீவிரவாதிகளும் எந்த வித்தியாசமும் இல்லை” என்றும், ஐ.நா. வில் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். 

மிக முக்கியமாக, “ரஷ்யாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்காவிட்டால், ஐ.நா. சபையை இழுத்தி மூடிவிடலாம்” என்றும், ஜெலன்ஸ்கி ஆவேசமாக தெரிவித்து உள்ளார். 

மேலும், “உக்ரைனின் புச்சா நகரில் சிதறி கிடந்த மனித சடலங்கள் தொடர்பாக ரஷ்ய ராணுவம் மீது தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்றும், ஜெலன்ஸ்கி ஐ.நா.வை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த எழுச்சி மிக்க உரையானது, தற்போது உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.

இதனிடையே, உக்ரைனில் புச்சா நகரில் நடந்த படுகொலைகளுக்கு, ஐ.நா சபையில் இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பையும் இந்தியா ஆதரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.