“900 அப்பாவி பொது மக்களை ரஷ்ய படைகள் சுட்டுக்கொன்றுள்ளது.. 3000 உக்ரைன் வீரர்கள் பலி” உக்ரைன் பகீரங்க குற்றச்சாட்டு..
“3 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலியாகி உள்ளதாகவும், உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 900 அப்பாவி பொது மக்கள் சடலமாக கிடப்பதாகவும்” உக்ரைன் அரசு பகீரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் 52 வது நாளாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.
அத்துடன், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன் தொடர்ச்சியாகவே, “ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிக்கையாக வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது “உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 900 அப்பாவி பொது மக்கள் சடலமாக கிடப்பதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
அதாவது, கருங்கடல் பகுதியில் நின்றிருந்த மோஸ்க்வா என்ற ரஷ்யாவின் பிரமாண்ட கப்பலை உக்ரைன் ஏவுகணையை செலுத்தி கடும் சேதத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதை உக்ரைனும் ஒப்புக்கொண்டிருந்தது.
அதாவது, கருங்கடலில் நிற்க வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் மாஸ்க்வா மீது, உக்ரைனின் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதில், ரஷ்யாவின் கருங்கடல் போர்க்கப்பலபானது, மிக கடுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது, மிக கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாக” வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்த ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்திற்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலை மீது, கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் தான், “உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுமார் 900 அப்பாவி பொது மக்கிளின் சடலங்கள் கிடப்பதாக” உக்ரைன் அரசு முன்னதாக அறிவித்து உள்ளது.
மேலும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இது வரை சுமார் 3 ஆயிரம் ராணு வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாகவுமு், 10 ஆயிரம் பேர் காயமடைந்து உள்ளதாகவும்” உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தற்போது கூறியுள்ளார்.
அதேபோல், “இந்த போரில், இது வரை ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும்” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, “உக்ரைன் ராணுவத்தை சமாளிக்க முடியாமல், ரஷியா அணு ஆயுத தாக்குதலை நடத்தலாம்” என்றும், உக்ரைன் அதிபர ஜெலன்ஸ்கி, முன்னெச்சரிக்கையாக கூறியுள்ளார். இது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதனிடையே, ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு பதிலடி தரும் வகையில், “இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சம் மற்றும் அந்நாட்டின் உயர் அதிகாரிகள் சிலர் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதாக” ரஷ்ய பாதுகாப்புத்துறை தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.