டிரம்பின் கடைசி ஆசை; மறுப்பு தெரிவித்த அமெரிக்க ராணுவம்
By Abinaya | Galatta | Jan 20, 2021, 03:53 pm
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்க உள்ளார். அவரது தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்த டொனால்டு டிரம்ப், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் பின்பு ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியில், டிரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையுடன் ஏற்பட்ட பிரச்சனையினால் கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார்.
இந்நிலையில் , இன்று இரவு ஜோ பைடன் பதவியேற்க இருக்கிறார். விர்ஜீனியா மாகாணத்தில் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் மற்றும் Black Panthers இயக்கத்தினரும் ஆயுதங்களுடன் பேரணி நடத்தி உள்ளனர்.
தான் விடைபெறும் நிகழ்வின் போது , தனக்கு ராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டொனால்டு டிரம்ப் கேட்டு இருந்தார். ஆனால் அதற்கு அமெரிக்க ராணுவம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், ” அமெரிக்காவின் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள். ஜோ பைடன் அரசுக்கு அதிர்ஷடமும் ஒத்துழைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம். தமது ஆட்சிக்காலத்தில் புதிய போர்களை தொடங்காத அதிபர் நான். அமெரிக்கா பாதுக்காப்புடனும், வளமானதாகவும் இருக்க வாழ்த்துக்கள்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.