டிக்டாக் சேலஞ்ஜ்.. 4 மாணவர்கள் பலி! பள்ளி வளாகத்தில் நடந்த அதிபயங்கரம்
டிக்டாக் சேலஞ்ஜ் என்ற பெயரில், பள்ளி வளாகத்தில் 4 மாணவர்கள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்தியாவில் டிக்டாக் ஆப்கள் எல்லாம் தடை செய்யப்பட்டு இருக்கின்றன. என்றாலும், டிக்டாக் ஆப்கள் நடைமுறையில் இருந்த போது, இந்த ஆப் துணையுடன் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன.
அதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப் தான் இந்த டிக்டாக் ஆப் ஆகும்.
அதுவும், பாடல்கள் மற்றும் நடனம் சார்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப், அறிமுகமான அடுத்த சில மாதங்களிலேயே உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால், உலககெங்கும் உள்ள பலரது செல்போனில் இந்த டிக்டாக் ஆப் இடம் பெற்றிருந்ததால், இந்த டிக்டாக்கிற்கு பெரும்பாலும் இளம் வயதினர் அதிகம் அடிமையாகி கிடந்தனர்.
ஆனால், இந்த டிக்டாக் ஆப்பானது, தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, டிக்டாக் சேலஞ்ஜ் என்ற பெயரில் வெளிநாடுகளில் மேலும் பிரபலமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, “ஒருவர் செய்து பதிவேற்றும் வீடியோ போன்றே அதனை பார்ப்பவர்களும் செய்ய தொடங்கினர். நடனத்தில் தொடங்கிய இந்த டிக்டாக் சேலஞ்ஜ் பிறகு அபாயகரமான ஒன்றாக தற்போது உருவெடுத்து உள்ளது.
இதன் காரணமாக, பொது மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த பல நாடுகள் இந்த ஆப்கள் அதிரடியாக தடை செய்ய தொடங்கி உள்ளன.
எனினும், அமெரிக்கா போன்ற பல உலக நாடுகளில் இந்த ஆப்கள் இன்றும் செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான், அமெரிக்காவை அச்சுறுத்தும் டிக்டாக் சேலஞ்ஜ் ஒன்று, அந்நாட்டு பெற்றோர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்திருக்கிறது.
அதாவது, அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில், துப்பாக்கிசுடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அந்த துப்பாக்கிசூட்டை நடத்தியது யார் என்றால், அதே பள்ளியில் படிக்கும் ஒரு 15 வயது மாணவன் ஆவான்.
அந்த 15 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் அது பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் அந்த பள்ளி வாளகத்தில் பலியாகினர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில், 7 பேர் பலத்த காயம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அங்கு விரைந்து வந்த அந்நாட்டு போலீசார், அந்த பள்ளிகளில் அதிரடி நடவடிக்கைளில் ஈடுபட்டனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, டிக்டாக் ஆப்கள் மூலமாக, பள்ளிகளில் மாணவர்கள் பிற மாணவர்களை சுடும் சேலஞ்ஜ் வைரலாகி வருவது தெரிய வந்து உள்ளது.
இது குறித்த வீடியோகளை பார்த்தே அந்த மாணவனும் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஆனால், இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிக்டாக் நிறுவனம் “இப்படியாக நாங்கள் எந்த ஒரு சேலஞ்களும் பரவவில்லை” என, தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் மறுத்து உள்ளனர்.
மாணவர்கள் இடையேயான இந்த துப்பாக்கிசூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.