தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் காதலன் தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என விரக்தியில் மூன்று மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் கருப்பூரைச் சேர்ந்தவர் சாவித். இந்த இளைஞர் அதே பகுதியில் உள்ள ரைஸ் மில்லில் வேலை பார்த்து வருகிறார். திருவநாதபுரத்தை சேர்ந்த ஆர்த்தி நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கருப்பூர் - திருவநாதபுரம் என்று அருகருகே உள்ள இந்த இரண்டு ஊரைச் சேர்ந்த சாவித் -ஆர்த்தி இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதனையடுத்து அடிக்கடி காதலனுடன் தனிமையில் சந்தித்ததால் ஆர்த்தி மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சாவித் இடம் கேட்க, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள தனது சமூகத்தார் விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார் சாவித். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதில் மனமுடைந்த மாணவி ஆர்த்தி, கல்லூரியின் விடுமுறையில் வீட்டில் இருந்த போது விரக்தியில் எலி பேஸ்ட் சாப்பிட்டிருக்கிறார்.
அதன் பின்பு சாப்பிட்டு இரண்டு நாள் இருந்த நிலையில் மூன்றாவது நிலையில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்ததில் 3 மாத கரு கலைந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஆசிப் மீது திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தற்கொலைக்கு தூண்டுதல், கற்பழிப்பு, பெண்ணை காதலித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சாவித்தை தேடி போலீசார் வருகின்றனர். இந்த செய்தி அப்பகுத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.