“எந்த சட்டத்தின் கீழ் புல்டோசர்களால் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது?” என்று, உத்திரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றி ஒரு டிவி விவாதத்தில் பங்கேற்று பேசிய போது, முகமது நபிகள் குறித்து மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி, நபிகளை மிக கடுமையாக விமரச்னம் செய்திருந்திருந்தார். இதனைக் கண்டித்து, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு இரு தரப்பினருக்கு இடையே கடும் மத மோதல் வெடித்தது. இதனால், அமைதிக்கு பெயர் போன இந்தியா, கலவர பூமியாக மாறிப்போனது.
இதனையடுத்து, நுபுர் சர்மாவின் கருத்துக்கு இந்தியா முழுவதும் மிக கடும் கண்டனங்கள் எழத் தொடங்கிய நிலையில், பாஜவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக தெரிவித்த கருத்திற்கு எதிராக ஒன்று திரண்ட உலகின் அனைத்து இஸ்லாமிய நாடுகளும், “இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று, ஒட்டுமொத்தமாக போர்கொடி தூக்கியதுடன், இந்தியாவிற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.
ஆனாலும், இவரை நுபுர் சர்மா கைது செய்யப்படவில்லை. ஆனால், உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பபட்ட கலவரம் காரணமாக, பலர் கைது செய்யப்பட்டு நிலையில், இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்பட்டன.
குறிப்பாக,டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதியும், மாணவர் செயற்பாட்டாளருமான ஆஃப்ரின் பாத்திமாவின் வீட்டையும் உத்தரப் பிரதேச அரசு, இடித்து தரைமட்டமாக்கியது. இதனால், அங்கு பெரும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.
“இது இஸ்லாமிய வெறுப்பின் உச்சமான இந்த அநாகரிகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்” இது குறித்து, நாட்டின் பல்வேறு தலைவர்களும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அத்துடன், “அஃப்ரின் பாத்திமா வீடு இடிப்பு சம்பவம், ஒட்டு மொத்த இஸ்லாமிய மதத்தினரையும் பாஜக தண்டிக்கிறது” என்று, ஓவைசி மிக கடுயைமாக விமர்சனம் செய்து உள்ளார்.
மிக முக்கியமாக, உத்தரப் பிரதேசத்தில் புல்டோசரால் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடித்தில், “பாஜகவுக்கு எதிராக போராடியவர்களின் வீடுகளை, உ.பி. அரசு புல்டோசர் மூலம் இடித்து வருவாக” அந்த கடிதத்தில் அவர்கள் அனைவரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் தான், “வீடுகளை புல்டோசரால் இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக” இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் போபண்ணா, விக்ரம்நாத் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “குண்டர்கள், கல்லெறிபவர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள் என்ற சந்தேகம் கொள்ளக் கூடிய நபர்களுடைய வீடுகளை எந்தவிதமான முன் அனுமதியும் இல்லாமல், இடித்து தள்ளுகின்றனர் என்றும், இது பற்றி கேள்வி கேட்டால் இவை சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் என்று, மாநில அரசு சார்பில் விளக்கம் அளிக்கிறார்கள்” என்றும், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
அத்துடன், “சுதந்திரத்திற்கு முன்பாகவும், அவசர நிலை காலத்திலும் கூட இப்படியான ஒரு செயல்பாடு நடந்தது கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களின் வீடுகளும் இடித்துத் தள்ளப்படுகிறது என்றும், இந்தியா மாதிரியான குடியரசு நாட்டில் இது நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்றும், வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதே போல், “உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற திட்ட சட்டத்தின் படி, சட்ட விரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால் இத்தகைய விதி முறைகள் எதையும் பின்பற்றாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து ஒரு மாநில அரசே, சட்ட விரோதமாக இவ்வாறு செயல்பட்டு வருகிறது” என்று, மனுதாரர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இப்படியாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “வீடுகள் இடிக்கப்பட்டால், அவர்களால் உடனடியாக வீடுகளை கட்ட முடியாது என்றும், பொருளாதார இழப்பீட்டை அடிப்படையாக கொண்டு நீதிமன்றத்துக்கும் உடனடியாக அவர்களால் வர முடியாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றும், சுட்டிக்காட்டினார்.
“இதனால், புல்டோசரால் வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க கோரிய மனு மீது 3 நாட்களுக்குள் பதில் அக்க வேண்டும் என்று, உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது” என்றும், நீதிபதிகள் அமர்வு அதிரடியாக உத்தரவிட்டனர்.
குறிப்பாக, “சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, உரிய சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என்றும், நீதிபதிகள் கண்டிப்புடன் வலியுறுத்தினர்.
இதனையடுத்து, இந்த வழக்கு அடுத்த 3 நாட்களுக்கு பிறகு, 21 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.