“60 வயது பாட்டி வரை பாலியல் பலாத்காரம்” உக்ரைன் போரில் உடலுறவுக்காக உக்கிரமான ரஷ்ய வீரர்கள்! “நடப்பது என்ன?”
“உக்ரைன் போரில், உடலுறவுக்காக உக்கிரமாகும் ரஷ்ய வீரர்கள் அந்நாட்டில் 60 வயது தாண்டிய பெண்களை கூட விட்டு வைக்காமல், தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை குன்று குவிப்பதாக அடுக்கடுக்கான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், 24 வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளிவந்தம் வண்ணம் உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுவும், உக்ரைன் போரில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகைளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ரஷ்ய போர் வீரர்கள் பலரும், உடலுறவுக்காக உக்கிரமான பல்வேறு விதங்களில் கடும் கொடூரங்களை நிகழ்த்தி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளன.
இப்படியாக, ரஷ்ய வீர்ரகளின் பாலியல் பலாத்கார அட்டகாசங்கள் உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் தொடர்ந்து உக்கிரமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இப்படியான குற்றச்சாட்டைத் தான், கடந்த வாரம் உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சரும் கூறியிருந்தார். அதுவும், “உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அதாவது, “ரஷ்யா அறிவித்த பகுதி நேர போர் நிறுத்தத்திற்கு முன்னரே, உக்ரைனில் உள்ள ஏராளமான பெண்களை, ரஷ்ய வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்வதாக” உக்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
தற்போது இதே குற்றச்சாட்டை உக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சியான ஹோலோஸ் கட்சியின் எம்.பி. லிசியா வெசிலின்கோ முன் வைத்து உள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ரஷ்ய வீரர்கள் பலரும், 60 வயதுக்கு மேலான பெண்களை கூட விட்டு வைக்காமல் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும்” பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
“ரஷ்ய வீரர்களின் உச்சக்கட்ட கொடூரம் தாங்க முடியாமல் பல பெண்களும் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும்” அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும், “பெரும்பாலான பெண்கள் முதலில் தங்கள் குழந்தைகளை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்ட பிறகு, வீட்டிலிருந்து வெளியேறும் போது ரஷ்ய வீரர்களிடம் சிக்குவதாகவும், அப்போதும் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் எம்.பியான லிசியா வெசிலின்கோ வேதனை தெரிவித்து உள்ளார்.
குறிப்பாக, “பெரும்பாலான உக்ரைன் நாட்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் ரஷ்ய வீரர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், சிலர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும்” அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
முக்கியமாக, “ரஷ்ய வீரர்களின் சிறுவர் சிறுமிகளை குறி வைத்தும், இந்த தாக்குதலை நடத்தி வருவதாகவும்” எம்.பி. லிசியா வெசிலின்கோ பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
மிக முக்கியமகா, இப்படியாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் இந்த உச்சக்கட்ட கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாக பேச முன்வரவில்லை என்றும், இதனால் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களுக்காக நாங்கள் சில விசயங்களை சேகரித்து வருகிறோம் என்றும், மற்றொர உக்ரேனிய எம்.பி மரியா, கவலையுடன் கூறியுள்ளார்.