“உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியாது” சர்வதேச நீதிமன்ற உத்தரவை அதிரடியாக நிராகரித்த ரஷ்யா!
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக 13 நாடுகளும், தீர்ப்புக்கு எதிராக 2 நாடுகளும் வாக்களித்திருக்கம் நிலையில், “உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியாது” என்று, சர்வதேச நீதிமன்ற உத்தரவை ரஷ்யா, அதிரடியாக நிராகரித்து உள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்றுடன் 22 வது நாளாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யா தனது பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைனை மிக கடுமையாக தாக்கி வருவதால், ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்களின் பல இடங்களிலும் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளும் ரஷ்யா வசம் சென்று உள்ளன.
இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான இந்த போரை நிறுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும், அது முற்றிலுமாக தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.
இந்த சூழலில் தான், “எங்கள் நாட்டில் ரஷ்யா, இனப்படுகொலை புரிந்து வருவதாக” உக்ரைன் மிக கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது.
அத்துடன், “இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவுக்கு உத்தரவிடக்கோரி, சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் முறையிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.
அப்போது, இரு நாட்டு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், “உக்ரைன் மீது நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று, ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு காரணமாக, “உக்ரைன் மீது தொடர்ச்சியாக நடத்தி வரும் இந்த போரை ரஷ்யா உடனடியாக நிறுத்திவிடும்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், “உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த முடியாது” என்று, ரஷ்யா தற்போது அதிரடியாக அறிவித்து உள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரஷ்யா அதிரடியாக நிராகரித்து உள்ளது.
இதன் மூலம், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இது, சர்வதேச நீதிமன்றத்தை கடும் அதிர்ச்சியடை செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த உலக நாடுகளையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அதே நேரத்தில், “உக்ரைன் மீது தொடர்ச்சியாக நடத்தி வரும் இந்த போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிற சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஆதரவாக 13 நாடுகளும், இந்த தீர்ப்புக்கு எதிராக 2 நாடுகளும் வாக்களித்து” இருக்கின்றன.
அதாவது, சர்வதேச நீதிமன்றத்தில் 15 நாடுகளின் நீதிபதிகள் இருக்கின்றனர். இவர்களில் “அமெரிக்கா, இந்தியா, ஸ்லோவாக்கியா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொராக்கோ, சோமாலியா, உகாண்டா, லெபனான், ஜமைக்கா” ஆகிய 13 நாடுகளின் நீதிபதிகள் இந்த வாக்கெடுப்பில் தீர்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர்.
அத்துடன், ரஷ்யா மற்றும் சீன நீதிபதிகள் இந்த தீர்ப்பிற்கு எதிராக வாக்களித்து உள்ளனர். இந்தியாவும் தீர்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “துரோகிகளும், தாய்நாடு மீது பற்று இல்லாதவர்களும் விரைவில் அப்புறப்படுத்தப்பட்டு ரஷ்யா முற்றிலுமாக சுத்தம் செய்யப்படும்” என்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கும் விதமாக தெரிவித்து உள்ளார். இதுவும், மற்ற உலக நாடுகளை கடும் அச்சத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.