#IPL2022 இன்றைய லீக் போட்டியில் #RR ராஜஸ்தான் அணி ஹாட்ரிக் வெற்றியை குறிவைத்து களம் காணப்போகும் நிலையில், மீண்டும் வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் #RCBபெங்களுரு களம் காண உள்ளது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் 15 வது சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற உள்ள 13 வது லீக் போட்டியில் #RR vs #RCB அணிகள் மோதுகின்றன.
இன்று மோதும் இந்த இரு அணிகளுமே, தங்களின் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்று, அந்த வெற்றியின் வேகத்தைத் தொடரும் முனைப்பில் களமிறங்க காத்திருக்கின்றன.
அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இது வரை 2 போட்டிகளில் விளையாடி அந்த 2 போட்டிகளிலுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் சூப்பர் டாப்பர் அணியாக முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
#RR ராஜஸ்தான் பலம்
- #RR ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தனது அணியை சூப்பராகவே வழி நடத்திச் செல்கிறார் என்ற பெயரும், அவருக்கு வந்து சேர்ந்து உள்ளது.
- கடந்த முறை மும்பைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்த ஜோஸ் பட்லர், இன்றைய போட்டியில் #RCB க்கு கடும் சவால் விடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
- அந்த அணிக்கு தேவ்தத் படிக்கல் இன்னும் கூடதல் பலமாக இருக்கும் நிலையில், கேப்னட் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் என்று பல அதிரடி மன்னன்களும் #RR அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.
- பொதுவாகவே, #RR அணி தொடர்ந்து சூப்பராக விளையாடி வருவதால், #RR அணியால் இயல்பாகவே 180 ரன்களை கடக்க முடிகிறது.
- #RR அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில், மிகவும் வலிமையானதாகத் திகழ்கிறது.
- யஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட், பிரஷித் க்ருஷ்ணா என்று, பலமான பவுலிங் கட்டமைப்பே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இதனால், இன்றைய #RCB க்கு அணிக்கு எதிரான போட்டியில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் #RR களம் காண இருக்கிறது.
#RCB பலம்
- #RCB அணியை பொறுத்தவரையில், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி 205 ரன்கள் சேர்த்தது. என்றாலும், பஞ்சாப் அணியே அதில் வெற்றிப் பெற்றது. இதனால், 200 ரன்களுக்கு மேல் ரன்கள் அடிக்க கூடிய வீரர்கள் அந்த அணியில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
- அதே போல், #RCB அணி விளையாடிய தனது 2 வது போட்டியில். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக வெற்றி பெற்றது.
- கொல்கத்தா அணிக்கு எதிரான 2 வது போட்டியில், #RCB பவுலர்கள் 128 ரன்களுக்குள் எதிர் அணியை கட்டுப்படுத்தி அசத்தினர்.
- இப்படியாக, போட்டியில் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே #RCB அணி வலுவாகவே இருக்கிறது.
- #RCB யை பொறுத்தவரையில், கேப்டன் பாப் டுபிளசிஸ் ஓபனிங் இறங்கி, அதிரடி காட்டுவார் என்பதால், இதுவே எதிர் அணிக்கு பீதியை ஏற்படுத்தும்.
- பாப் டுபிளசிஸ் உடன் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் என்று அதிரடி காட்ட பலரும் அணியில் உள்ளனர்.
- இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், அந்த அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
- RCB யை பொறுத்தவரையில், பவுலிங் சிராஜ், ஹசரங்கா, ஆகாஷ் தீப் ஆகியோர் செம ஃபார்ம்மில் உள்ளனர்.
இப்படியாக, இந்த இரு அணிகளுமே சம பலத்துடன் உள்ளதால், இந்த இரு அணிகளுமே இன்றைய போட்டியில் வெற்றி பெற மிக கடுமையாக போராடும். இதனால், இன்றைய போட்டியானது ரசிகர்களும் விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.