“உக்ரைனுக்கு உலகம் முழுவதும் பெருகும் ஆதரவு” உலகமெங்கும் போராட்டங்கள் அதிகரிப்பு..
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால், உக்ரைன் மிக பெரிய அளவில் சேதம் அடைந்து உள்ளன.
உக்ரைனிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தாலும், “நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்” என்று, நேற்றைய தினம் உக்ரைன் அதிபர் கூறியிருந்தது, உலக நாட்டு மக்களை பெரிதும் கவலைக்கொள்ளச் செய்தது.
எனினும், உக்ரைன் நாட்டை பல முனைகளில் இருந்தும் ரஷிய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் நாட்டின் பல இடங்களிலும் எங்கு பார்த்தாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்து மேக மூட்டங்களாக காணப்படும் காட்சிகளும், பொதுமக்கள் அதிகாம் பாதிக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் பல்வேறு நாட்டின் ஊடகங்களும் பதிவு செய்து வருகின்றன.
அதுவும், அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், “எங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படை எடுப்பை கண்டித்து அந்நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக” சென்றனர்.
முக்கியமாக, ரஷ்யாவை கண்டித்தும், உக்ரைன் நாட்டின் மீதான இந்த போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திபடியே, அர்ஜென்டினாவில் ஏராளமான மக்கள் பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியின் போது, “உக்ரைன் நாட்டில் வாழும் தங்களது உறவினர்களின் நிலைமை குறித்தும், போராட்டக்காரர்கள் பெரிதும் கவலை” தெரிவித்து வருகின்றனர்.
இவற்றுடன், “உக்ரைன் நாட்டின் மீதான இந்த போருக்கு ரஷ்ய அதிபர் புதினுக்கு கடும் கண்னடமும்” தெரிவித்து வருகின்றனர்.
அதே போல், பிரேசில், மெக்சிகோ, பெரு உள்ளிட்ட நாடுகளிலும் போரை கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், “உக்ரைன் மீதான இந்த போரை உடனடியாக நிறுத்தக்கோரி அந்நாட்டு மக்கள் கடும் கண்டன முழக்கங்களையும்” எழுப்பி வருகின்றனர்.
அத்துடன், “உடனடியாக, உக்ரைனில் இருந்து ரஷ்யப்படைகள் உடனே வெளியேற வேண்டும்” என்றும், அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குறிப்பாக, துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில் அரை இறுதியில் வெற்றி பெற்றப் பிறகு, ரஷ்ய டென்னிஸ் வீரர் ரூப்லெவ், கேமரா லென்சில் “நோ வார் ப்ளீஸ்” என்று எழுதி, அவர் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்.
இது குறித்து கருத்து பேசிய ருப்லெவ், “டென்னிஸ் வீரராக இருப்பதன் மூலம், உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்ட விரும்புகிறேன் என்றும், நாங்கள் பல்வேறு நாடுகளில் விளையாடுகிறோம் என்றும், இந்தச் செய்திகளை எல்லாம் கேட்பது எளிதல்ல என்றும், நான் அமைதிக்காக இருக்கிறேன்” என்றும், அவர் தனது கவலையை தெரிவித்து உள்ளார்.
இது தற்போது, சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் நாளுக்கு நாள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாடும், ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாடும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.