NeoCoV எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ், சீனாவிலிருந்து தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த வகையான கொரோனா இறப்பு விகிதம் மூன்றில் ஒருவர் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் 3 வது அலையாக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், அடுத்தடுத்து மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று, பல வகைகளிலும் தொடர்ச்சியாக பரவி வருகிறது. 
இதனால், உலகம் முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பீதி அடைந்ததுடன், கடுமையாகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இப்படியாக டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் இந்த சூழலில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று தற்போது அதி வேகமாகப் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இப்படியாக, ஒமைக்ரானின் மாறுபட்ட வகையான கள்ள ஒமைக்ரான் என்று அழைக்கப்படும், இந்த வகையான வைரஸ் தொற்றின் தாக்கமானது தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் சத்தமின்றி பரவிக்கொண்டு இருக்கும் இந்த சூழலில் தான், இந்த ஒமைக்ரான் திரிபை பற்றி கடந்த வாரம் விளக்கமாக சொன்ன உலக சுகாதார நிறுவனம், “B.1.1.529 என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் BA.1, BA.2 மற்றும் BA.3 என்ற 3 முக்கிய உட்பிரிவுகளைக் கொண்டு உள்ளதாக” தெளிவாக கூறியது.

“அந்த வகையில் பார்க்கும் போது,  ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸில் பிஏ.2 என்ற புதிய மரபணு மாறுபாடு உலகின் மற்ற நாடுகளில் புதிதாக கண்டுப்படிக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அது இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளதாக” அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிய கொரோனா வைரஸான நியோகோவ் NeoCoV என்ற புதிய வகை வைரஸ், வேகமாக பரவி வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சீனாவின் உஹானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கூறும்போது, “நியோகோவி NeoCoV என்ற புதிய வகை கொரோனா வைரஸ், பற்றி பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை” வெளியிட்டு உள்ளனர்.

அதன் படி, “இந்த வகையிலான கொரோனா தொற்று அதிக இறப்பு மற்றும் தொற்று விகிதத்தைக் கொண்டு உள்ளது” என்றும், எச்சரித்து உள்ளனர்.

முக்கியமாக, ஸ்புட்னிக் அறிக்கையின் படி, “நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும், இது மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS COV உடன் தொடர்புடையது” என்றும், விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

“NeoCoV முதலில் தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டறியப்பட்டது என்றும், அதன் பிறகு அது விலங்குகளிடையே பரவியது என்றும், தற்போது ஒரு பிறழ்வு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வகையான வைரஸ் பரவுவதற்கு வழி வகுத்துள்ளது” என்றும், கூறுகின்றனர். 

“இந்த வகையான வைரஸ் தொற்றுகள், மனித உடலில் உள்ள செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்துவதால், மிக அதிகமான ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும் விஞ்ஞானிகள் கடுமையாக எச்சரித்து உள்ளனர். 

அத்துடுன், “மெர்ஸ் கோவ் MERS CoV மற்றும் மெர்ஸ் கோவ் MERS CoV என்று, வைரஸ்களின் கலவையாக உள்ள இந்த நியோகோவ் வைரஸ் பாதிக்கப்பட்ட மூன்றில், ஒருவர் இறப்பதற்கு வழி வகுக்கும்” என்றும், ஸ்புட்னிக் எச்சரித்து உள்ளது.

இதனால், “இறப்பு விகிதம் மற்றும் அதிகமான பரவல் சாத்தியங்களையும் இந்த நியோகோவ் ஏற்படுத்தும்” என்றும், சீன விஞ்ஞானிகள் தற்போது புதிய எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனால், உலக மக்கள் மீண்டும் பீதியடைந்து உள்ளனர்.