மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை- பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறை- பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்! - Daily news

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சென்னை மாநகர காவல் துறையினருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக, அவர்களது பணியினை பாராட்டி, வாழ்த்தினார்.

சென்னை மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் சிக்கிய கொலையாளிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சாஸ்வத் என்ற மகனும் உள்ளனர். மகளும் மகனும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கி இருந்த இருவரும் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர்.

இருவரையும் அவர்களது கார் ஓட்டுநர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய கார் ஓட்டுநர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில் வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில் அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர். அதன்படி, தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீட்டில்,  2 பேரின் புதைத்தனர். பின்னர் காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்த தப்பி சென்று நேபாளம் செல்ல முன்றனர். கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர். இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினரை கொன்று புதைத்தது  தெரிய வந்தது.

அதாவது கடந்த வாரம்  7.5.2022 அன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவனது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல்துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திருமதி திஷா மிட்டல், இ.கா.ப., காவல் உதவி ஆணையர்கள் எம். குமரகுருபரன் மற்றும் டி. கௌதமன், காவல் ஆய்வாளர்  எம். ரவி, உதவி ஆய்வாளர்கள் சி. கிருஷ்ணன், வி. மாரியப்பன், எம். அன்பழகன், காவலர் நிலை-  டி. சங்கர் தினேஷ், காவலர்  எஸ். கதிரவன் ஆகியோரை முதலமைச்சர் பாராட்டி, வாழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., கூடுதல் காவல் ஆணையர் முனைவர் என். கண்ண ன், இ.கா.ப., காவல் இணை ஆணையர் (தெற்கு) பிரபாகரன், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

Leave a Comment