“ஆபாசத்தை தூண்டுகிறதா பெண்களின் சடை?” குதிரை வால் சடைக்கு அதிரடி தடை!
பெண்களின் குதிரை வால் வகை சடையானது ஆபாசத்தை தூண்டும் விதமாக இருப்பதாக கூறி, இந்த வகையான சடைக்கு பள்ளிகளில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் நாட்டில் தான் இப்படி ஒரு அதிரடியான தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உலகம் நாகரிகம் அடைந்து வருகிறது. மனிதர்களும் நாகமரிகம் அடைந்து, இந்த உலக சூழலுக்கு ஏற்ப பலரும் தங்களை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில், பெண்களுக்கும் முன்பை விட தற்போது மிக பெரிய அளவில் சுதந்திரம் அளிக்கப்பட்டு வருவதால், பெண்கள் எல்லா துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், பெண்களின் ஆபாசம் சார்ந்த விசங்கள் மற்றும் குற்றங்கள் மட்டும் இன்னொரு பக்கம் குறையாமல் தொடர்வதும் வேதனையாகவே இருக்கிறது.
இப்படியான சூழலில் தான், ஜப்பான் நாட்டில் உள்ள பள்ளிகளில் “மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் வகையான சிகை அலங்காரத்தில் வருவதற்கு அதிரடியாக தடை” விதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், “பள்ளிக்கு வரும் சக மாணவிகளும் குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும் போது, மாணவிகளின் கழுத்து பகுதி சக மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் இருப்பதால், இந்த வகையான சிகையலங்காரத்திற்கு தடை விதித்திருப்பதாகவும்” அந்நாடு விளக்கம் அளித்து உள்ளது.
இந்த செய்தியானது, ஜப்பான் நாட்டில் மட்டுமில்லாது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கும் நிலையில், “இது போன்ற வினோதமான விதிமுறைகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லை என்றாலும், இந்த தடைக்கு அங்கு மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள அந்நாட்டின் நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மோடோகி சுகியாமா, “நான் எப்போதும் இது போன்ற விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். ஆனால், இது போன்ற விதிகளுக்கு போதுமான எதிர்ப்பு இல்லாததாலும் இது போன்ற விதிகள் சாதாரணமாகிவிட்டதாலும், மாணவிகள் அவற்றை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை” என்றும், தனது கவலையைத் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், “இந்த தடை பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை தவறாக திருப்பும் விதமான பின்னோக்கு சிந்தனை” என்றும், எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.