தோனி பக்கா மாஸ்டர் ப்ளான்.. இறுதியில் முன்னணி வீரர்களை தட்டிதூக்கி டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

தோனி பக்கா மாஸ்டர் ப்ளான்.. இறுதியில் முன்னணி வீரர்களை தட்டிதூக்கி டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்! - Daily news

ஐபிஎல் மெகா ஏலத்தில் நேற்று முழுவதும் அமைதி காத்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கடைசி நேரத்தில் டிவிட்ஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட் கொடுத்து முன்னணி வீரர்களை தட்டி தூக்கி உள்ளது.

15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கும் நிலையில், ஐபிஎல் பீவர் ரசிகர்களிடம் பரவ ஆரம்பித்து உள்ளது. அந்த வகையில், இந்தியாவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஐபிஎல் மெகா ஏலம் 2 நாட்களாக நடந்துள்ளது.

அதன்படி, நேற்று காலை 12 மணி முதல் நடைபெற்ற இந்த மெகா ஏலத்தில் பல்வேறு சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அந்த வகையில், கடந்த கால ஐபிஎல் போட்டிகளில் நட்சத்திரங்களாக ஜொலித்த பல வீரர்களும் இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராமல் போனதும், அரங்கேறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அத்துடன், நேற்றைய தினம் ஐபிஎல் மெகா ஏலத்தில், “சிஎஸ்கே அணியானது தொடக்கம் முதலே தொடர்ந்து வீரர்களை எடுக்க மிகவும் திணறி” வந்தது என்றுரசிகர்களுகம் நேற்றைய தினம் விமர்சித்து வந்தனர். இதற்கு முக்கிய காரணம், சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் இந்த மெகா ஏலத்தில் இடம் பெறாமல் போனதும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் இளம் வீரர்களை சென்னை அணி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிதிஷ் ராணா, தீபக் ஹூடாவை சென்னை அணிக்கு ஏலத்தில் தேர்வு செய்ய ஆர்வம் காட்டிய நிலையில், ஹூடாவை 5.75 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துக்கொண்டது.

ஆல் ரவுண்டர் ஹோல்டரையும் சென்னை அணி தவறவிட்டு உள்ளது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இன்றைய தின ஏலத்தில் சென்னை அணி நடுவரிசை விரர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் குறிவைத்து உள்ளதாகவே கூறப்பட்டது.

ஆனால், 2 நாளாக இன்று நடைபெற்ற இந்த மெகா ஊலத்தில் சென்னை அணியானது டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட் கொடுத்தது.

அதாவது, இன்று காலையில் இருந்தும் சென்னை அணி யாரையும் எடுக்காமல் அமைதியாகவே இருந்து வந்தது. அப்போது, முன்னணி வீரர்கள் மற்ற அணிகளுக்கு சென்றுக்கொண்டிருக்க சென்னை அணியானது வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தது.

இதனால், “மிட்செர் சாப்பிடவா அங்க போனீங்க?” என்று, சென்னை ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்தார்கள். 

இந்த நிலையில் கடைசி நேரத்தில் தோனி ஸ்டைலில் அங்கு டிவிஸ் நடந்தது. 

அதாவது, 2 வது நாளான இன்று ஏலத்தின் கடைசி கட்ட பகுதிகளில், திடீரென அடுத்தடுத்து வீரர்களை ப்ளான் போட்டு தட்டி தூக்கியச் சென்றது சென்னை அணி. அதுவும், மிகவும் குறைந்த விலையில் மிக தரமான வீரர்களாக பார்த்து பார்த்து சென்னை அணி எடுத்துக்கொண்டது.

அதன்படி, அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடிய ஆல் ரவுண்டர் ராஜ்வர்த்தன் ஹங்கர்கேகர் என்ற இளம் புயலை, சென்னை அணி இன்று தட்டி தூக்கி உள்ளது. வேகப்பந்து வீச்சாளரான அவர், பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாட கூடியவர் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் தன்னை அவர் நிறுபித்துகாட்டியவர்.

அத்துடன், “ஹங்கர்கேகரை குட்டி ஹர்திக் பாண்டியா” என்று தான், அவரை ரசிகர்கள் புகழ்கிறார்கள். ஹங்கர்கேகர் பெயர் வந்ததும், மும்பை அணி களத்தில் குதித்து நிலையில், இறுதியில் சென்னை அணி ஹங்கர்கேகரை தண்டி தூக்கியது. ஹங்கர்கேகரை ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் சென்னை அணி எடுத்து அசத்தியது.

அதே போல், இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் தூபேவிற்காக 4 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி எடுத்து உள்ளது. அத்துடன், இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்றைய தினம் அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளதால், அவர் இன்னும் உற்சாகமடைந்து உள்ளார்.

மேலும், ஓடிசாவை சேர்ந்த தொடக்க வீரர் சேனாபதியை 20 லட்சம் ரூபாய்க்கே சென்னை அணி வாங்கியது. 

அதன் தொடர்ச்சியாக, நியூசிலாந்தின் முன்னணி ஓப்பனிங் வீரர் டெவொன் கான்வேவை 1 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இவர் டூப்ளசிஸுக்கு மாற்றாக இருப்பார் என்றும், கூறப்படுகிறது. 

அதே போல, நியூசிலாந்து முன்னணி ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னரை 1.9 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கி உள்ளது. இவர் ஏற்கனவே சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் டுவைன் ப்ரிட்டோரியஸை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. 
இவர்களுடன், சிமார்ஜீட் சிங் வெறும் 20 லட்சம் ரூபாய்க்கும், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்சானாவை வெறும் 70 லட்சம் ரூபாய்க்கும் அடுத்தடுத்து சென்னை அணி ஏலத்தில் தூக்கியது.

இப்படியாக, சென்னை அணி ஏலத்தில் எடுத்த அனைத்து வீரர்களுமே, தற்போது சிறப்பாக விளையாடி வரும் வீரர்களே என்றும் கூறப்படுகிறது. இதன் மூலமாக, “கேப்டன் தோனி மீண்டும் மாஸ்டர்” என்பதை நிரூபித்து விட்டார் என்றும், கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் அவரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment