#IPL2022 சீசனில் நேற்றைய போட்டியில், கடைசி வரை சென்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், லக்னோவை வீழ்த்தி 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக அஸ்வின் ரிட்டயர்டு அவுட் ஆனது, வைரலாகி வருகிறது.
#IPL2022 சீசனில் #RR vs #LSG இடையே நேற்று இரவு நடைபெற்ற 20 வது லீக் போட்டியில், டாஸ் வென்ற #LSG லக்னோ அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, #RR ராஜஸ்தான் அணி சார்பில் ஓப்பனிங் இறங்கிய பட்லர் - தேவ்தத் பட்டிக்கல் ஜோடி நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினர்.
எனினும், பட்லர் 13 ரன்னிலும், தேவ்தத் பட்டிக்கல் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த #RR ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வான் டர் டுசன் 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
இதன் பிறகு களமிறங்கிய ஹெட்மெயர் 36 பந்துகளில் 59 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுமையாக விளையாடி 23 பந்துகளில் 28 ரன்களை குவித்தனர். இதனால், #RR கணிசமான அளவுக்கு ரன்களை சேர்த்தது.
அப்போது, #RR ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டி, 18.2 ஓவரின் போது தாமாக முன்வந்து ரிட்டயர்ட் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் அஸ்வின். இதனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக அஸ்வின் ரிட்டயர்டு அவுட் ஆனது, கிரிக்கெட் உலகில் பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது, “#RR வீரர் அஸ்வின் ரன்கள் சேர்க்கும் வேகம் சற்று குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பி வைத்தது. அப்போது, ரியான் பராக் 4 பந்துகளில் 1 சிக்ஸர் உள்பட 8 ரன்களை எடுத்தார்.
இதனால், 20 ஓவர் முடிவில் #RR ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது.
பின்னர், #LSG அணியானது 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய #LSG லக்னோ அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அப்போது, #RR அணியின் பௌல்டின் முதல் ஓவரில் முதல் பந்தில் #LSG அணியின் கேப்டன் ராகுல், முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிங்கிய கிருஷ்ணப்பா கௌதமும் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தனர்.
அதன் பிறகு வந்த ஹோல்டர் 8 ரன்களும், தீபக் ஹுடா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க லக்னோ அணி அப்பிடியே திணறி நின்றது.
எனினும், மறுமுனையில்பொறுப்புடன் விளையாடி டி காக், 39 ரன்கள் எடுத்துபோது, அவுட்டானார். அடுத்த சில நிமிடத்திலேயே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த பதோனியும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
இதனால், இந்த போட்டியானது, மெல்ல மெல்ல #RR பக்கம் மாறியது. என்றாலும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் தனது அதிரடியான ஆட்டத்தால் பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் 19 ரன்கள் விளாசித் தள்ளினார்.
இதனால், கடைசி ஓவரில் #LSG அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, களத்தில் ஸ்டோனிஸ் - ஆவேஷ் கான் நின்ற நிலையில்,
இந்த கடைசி ஓவரை நேற்றைய போட்டியின் அறிமுக வீரர் குல்திப் சென் வீச வந்தார்.
இதில், முதல் பந்தில் ஆவேஷ் கான், சிங்கிள் ஓடிய நிலையில், அடுத்த பந்தை ஸ்டோனிஸ் எதிர்கொண்டார். இதனால், இந்த ஆட்டமானது #LSG பக்கம் மீண்டும் திரும்பியது.
அப்போது, கடைசி ஓவரின் 2வது பந்து புல் லெங்தில் ஓயிடாக வீச, அதனை ஸ்டோனிஸ் அடித்து அந்த பந்து நேரடியாக ஃபில்டரிடம் பிடிப்பட்டது. இதனால், கணக்கு 4 பந்துக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது. அடுத்த பந்தையும் அவர் சிறப்பாக வீச, ஸ்டோனிஸ் அதனை வித்தியாசமாக அடிக்கலாம் என்று முற்பட்டு, ரன் அடிக்காமல் நின்றார். இதனால், 3 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட நிலையில், அடுத்த பந்தையும் லாவகமாக அடிக்க முடியாத படி பந்தை வீசி அசத்தினார் குல்தீப் சென்.
இதன் காரணமாக, கடைசி 2 பந்தில் 14 ரன்கள் தேவை என்கிற நிலையில், கடைசி 2 பந்திலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் ஸ்டோனிஸ்.
இதனால் ராஜஸ்தான் அணி, கடைசி பந்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால், #RR ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அத்துடன், 2 வது இடத்தில் கொல்கத்தா அணியும், 3 வது இடத்தில் குஜராத் அணியும், 4 வது இடத்தில் பெங்களூரு அணியும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.