“வானிலிருந்து இந்தியா மீது விழ காத்திருக்கும் சர்வதேச விண்வெளி மையம்!?” ரஷியா எச்சரிக்கை
“வானில் அமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், இந்தியா மற்றும் சீனா மீது விழ போவதாக” ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “அப்புச்சி கிராமம்” திரைப்படத்தில் வருவதைப் போன்ற ஒரு காட்சி, தற்போது இந்தியாவில் நடக்க உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, “அப்புச்சி கிராமம்” திரைப்படத்தில், “பூமியை நோக்கி ஆயிரக்கணக்கான எரிகற்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள், அடுத்த 7 நாட்களில் இது பூமியின் மீது விழும் என்றும், அது விழுந்தால் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும் என்றும், இது தமிழகத்தில் “அப்புச்சி கிராமம்” பகுதியில் தான் விழும்” என்றும், அறிவியல் துறை அதிகாரியான கிட்டி என்பவர் கண்டுபிடிப்பார். இப்படியான ஒரு சம்பவம் தான், தற்போதும் அரங்கேறி இருக்கிறது.
அதாவது, சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளில் அமெரிக்கா, ரஷியா மிகப் பெரிய அளவில் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன.
அதன்படி, சர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.
அந்த, “சர்வதேச விண்வெளி மையத்தின் இயக்கத்தை கண்காணிப்பத்து, விண்வெளி மையம் பூமிக்கு மிக அருகில் வராமல் இருப்பதை உறுதி செய்வது” உள்ளிட்ட மிக முக்கிய பணிகளை ரஷியா தொடர்ச்சியாக செய்து வருகிறது.
அந்த வகையில், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ள நிலையில், அந்த போரானது தொடர்ந்து 3 வது நாளாக நீடித்து வருகின்றது.
இந்த சூழலில் தான், “அமெரிக்கா ரஷியாவுக்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் பட்சத்தில் 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையமானது இந்தியா, சீனா மீது விழும்” என்று, ரஷிய விண்வெளித்துறை தலைவர் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.
இது குறித்து ரஷிய விண்வெளித்துறை தலைவர் டிமிட்ரி ரோகொசின் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார தடைகள் ரஷிய விண்வெளி திட்டங்கள் உள்பட விண்வெளித்துறையில் மிக பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பு தர மறுத்தால், கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்கா அல்லது ஐரோப்பா மீது பாகங்களாக விழும் சர்வதேச விண்வெளி நிலையத்தை யார் காப்பாற்றுவது?” என்றும், அவர் கவலையுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், “500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி மையத்தின் பகுதி இந்தியா மற்றும் சீனா மீது விழ வாய்ப்பு உள்ளது என்றும், நீங்கள் அவர்களை இவ்வாறு மிரட்ட விரும்புகிறீர்களா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அததுடன், “சர்வதேச விண்வெளி மையம் ரஷியாவுக்கு மேல் பறக்கவில்லை என்றும், ஆகையால் அனைத்து ஆபத்துகளும் உங்களுக்கு தான் என்றும் நீங்கள் அதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்றும், சர்வதேச விண்வெளி மையத்துடனான எங்களில் ஒத்துழைப்பை அழிக்க விரும்புகிறீர்களா?” என்றும், அவர் பதிவிட்டு உள்ளார். இது, இந்திய மக்களை ஒருவித பீதிக்கு ஆளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.