“இது என்னடா புதுசா இருக்கு?” ரைஸ் குக்குரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த இளைஞர்!
இளைஞர் ஒருவர், ரைஸ் குக்குரை திருமணம் செய்து விவாகரத்தும் செய்த விவகாரம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியா நாட்டில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி தற்போது வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர் ஒருவர், “ரைஸ் குக்கரை திருமணம் செய்துகொண்டிருக்கும்” போட்டோக்களை தற்போது வெளியிட்டு உள்ளார்.
அத்துடன், “ரைஸ் குக்கரை திருமணம் செய்த” புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் கொய்ருல் அனம், “அந்த குக்கருக்கு பெண்களுக்கு அணிவது போன்ற வெள்ளை நிற முகத்திரையும் வாங்கி ஜோடித்து” இருக்கிறார்.
“முகத்திரை அணிந்த அந்த குக்கரை முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கும் அவர், 2 வாரங்களுக்கு முன்பு பதிவிட்டு தனது திருமணத்தை அப்போது அவர் உறுதி” செய்திருந்தார்.
மேலும், தன் மனைவி பற்றிய கேப்ஷனாக அவர் “அழகானவர், அதிகம் பேசாதவர், சொல்பேச்சு கேட்பவர், அன்பானவர், நன்கு சமைக்கத் தெரிந்தவர்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கொய்ருல் அனம் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் அனைத்தும், தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த திருமணம் யாவும் “முடிவு பெற்றிருப்பதாக” கொய்ருல் அனம் முறைப்படி அறிவித்து உள்ளார்.
குறிப்பாக, தனது விவாகரத்திற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அந்த காரணம் என்னவென்றால். “என் மனைவி சாதம் மட்டுமே சமைக்கிறார். அவளுக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அதனால், நான் அவரை விவாகரத்து செய்கிறேன்” என்றும், கொய்ருல் அனம் தனது விளக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
கொய்ருல் அனம், குக்கரை திருமணம் செய்துகொண்டு, அந்த குக்கரை தற்போது விவாகரத்து செய்து, அதற்கான காரணத்தையும் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.