#IPL2022 ப்ளே ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியிலேயே, #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி, #GT குஜராத் அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து உள்ளது.
#IPL2022 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் அனைத்தும் நடந்து முடிவடைந்து உள்ள நிலையில், நேற்று இரவு முதல் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் #RR ராஜஸ்தான் அணி - #GT குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற #GT குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி, #RR ராஜஸ்தான் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர்- யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்கியது. அப்போது, வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
அப்போது, முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன், முதல் பந்தில் இருந்தே சிக்ஸர் விளாசி ரன் வேட்டை அதிரடியாக தொடங்கினார். சாம்சன் மொத்தம் 26 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், மறுமுனையில் நின்ற ஜாஸ் பட்லர், நிதானமாகவே தொடக்கத்தில் பேட்டிங் செய்தார்.
என்றாலும், முதல் 42 பந்துகளை எதிர்கொண்டு சற்று நிதானமாக அரைசதம் அடித்தார் ஜாஸ் பட்லர்.
பின்னர், சஞ்சு சாம்சன் அவுட்டான பிறகு களத்திற்கு வந்த ஹெட்மெயர், வந்த வேகத்தில் 4 ரன்களுடனும், ரியான் பராக் 4 ரன்களுடனும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்து வெளியேறினர்.
அப்போது தான், ஜாஸ் பட்லர் தனது வழக்கமான அதிரடியை டாப் கியரில் தட்டித் தூக்கினார்.
குறிப்பாக அரை சதத்திற்கு பிறகு வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாக வான வேடிக்கையை ஜாஸ் பட்லர் காட்டிக்கொண்டிருந்தார்.
இதனால், 56 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 89 ரன்களை அடித்த ஜாஸ் பட்லர், அணியை ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினார். இதனால், #RR ராஜஸ்தான் அணி 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்களை இழந்து, 188 ரன்களை குவித்தது.
பின்னர், 189 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய #GT குஜராத் அணியில் முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, #GT அணியில் ஓப்பனிங் வீரர் விருதிமான் சாஹா டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் - மேத்யூவ் வேட் ஜோடி, சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், பவர்பிளே இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது #GT குஜராத் அணி.
பின்னர், சுப்மன் கில் - மேத்யூவ் வேட் ஜோடிகளான இருவருமே, 35 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அப்போது களத்திற்கு வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா - டேவிட் மில்லர் ஜோடி முதலில் பொறுமையாகவும், கேப் கிடைக்கும் சமயங்களில் பவுண்டரிகளாகவும் பறக்கவிட்டு #GT அணியின் ரன்வேகத்தை உயர்த்தினர்.
குறிப்பாக, கடைசி சில ஓவர்களில் #RR ராஜஸ்தான் அணி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார் என்றாலும், மில்லர் 35 பந்துகளில் அரைசதம் அடிக்க, ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களை கடந்து சிறப்பான ஃபார்மில் ரன்களை பறக்கவிட்டுக்கொண்டு இருந்தார்.
இப்படியாக, கடைசி 2 ஓவரில் #GT அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 19 வது ஓவரில் 7 ரன்கள் மட்டமே எடுக்கப்பட்ட நிலையில், பாண்டியா - டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருந்தனர்.
இதனால், #GT அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீச முதல் பந்தில் மில்லர் சிக்சர் விளாசினார். அதை தொடர்ந்து 2 வது பந்திலும் மில்லர் சிக்சர் தூக்கி அடிக்க, #GT அணியின் வெற்றி உறுதியானது. அதன் தொடர்ச்சியாக, மில்லர் 3வது பந்தையும் சிக்சராக தூக்கி அடிக்க, #GT அணி #RR ராஜஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி, சூப்பரான வெற்றியை பெற்றது.
அதுவும், 3 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் #RR ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இதனால், மில்லர் 38 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
எனினும், இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு அணிகளுக்குள்ளான போட்டியில் வெல்லும் அணியுடன், வரும் வெள்ளிக் கிழமை #RR ராஜஸ்தான் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.