“மெடாவெர்ஸ் விர்ச்சுவல் உலக விளையாட்டில் பெண் அவதாறுக்கு 4 ஆண் அவதார்கள் பாலியல் தொல்லை!”
வீடியோ கேம் போன்ற “மெடாவெர்ஸ் விர்ச்சுவல் என்னும் உலக விளையாட்டில் ஒரு பெண் அவதாறுக்கு, 4 ஆண் அவதார்கள் சேர்ந்து பாலியல் தொல்லை” கொடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாறிவரும் தொழில்நுட்ப உலகில், தற்போது புதிய வரவமாக “மெடாவெர்ஸ் என்ற விர்ச்சுவல் உலகம்” புத்தம் புதியதாய் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதாவது, “நமக்கு நாமே ஒரு விர்ச்சுவல் வடிவம் கொடுத்து உருவாக்கி, அதன் மூலமாக நாம் விரும்பும் உலகில் விர்ச்சுவலாக நம்மால் ஒரு அவதார மனிதராக வாழ முடியும்” வகையில், ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இப்படியான ஒரு புதிய தொழில்நுட்பமான “மெடாவெர்ஸ் விர்ச்சுவல்” மீது தான், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தற்போது ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 43 வயதான நினா ஜேன் பட்டேல் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், மெடா என்னும் விர்ச்சுவல் உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அவதார் வடிவமாக உலா வரும் தொழில்நுட்பத்தில் உட்புகுந்து உள்ளார். அப்போது, மெடாவில் ஹாரிசான் வென்யூவில் பிற 4 ஆண் அவதார்கள், இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்” இவர் அதிர்ச்சி அளிக்கும் புகாரை கூறி இருக்கிறார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து பேசி உள்ள பாதிக்கப்பட்ட 43 வயதான நினா ஜேன் பட்டேல், “அது ஒரு மோசமான கனவு போல் உள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
அத்துடன், “மெடாவெர்ஸ் விர்ச்சுவல் உலக விளையாட்டில், நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நிஜம் போலவே இருந்தது என்றும், அந்த ஆண் அவதார்கள் என்னை தகாத முறையில் பேசி, அத்து மீறி என்னிடம் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் நடந்து கொண்டார்கள் என்றும், என் உடலில் கண்ட இடத்தில் தொட்டார்கள்” என்றும், கூறி உள்ளார்.
மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பான பல்வேறு ஸ்க்ரீன் ஷாட்களையும், அவர் ஆதரமாக எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார்.
இதனால், “கடும் அதிர்ச்சியடைந்த நான், இந்த பயங்கரமான அனுபவத்தில் இருந்து என்னை முழுவதுமாக என்னை நானே வெளியேறி நினைத்து, அதன் படி உடனடியாக மெடாவில் இருந்து வெளியேறி தனது கணக்கையும் நான் நீக்கிவிட்டேன்” என்றும், ஆங்கில ஊடகத்திற்கு தனது அனுபங்களை பேட்டியாக கொடுத்து உள்ளார்.
இந்த பெண்ணின் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்து உள்ள மெடா நினாவனம், “இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிந்து வருத்தப்படுகிறோம்” என்றும், கூறி உள்ளனர்.
“இதன் மூலமாக, ஹாரிசான் வென்யூசில் இருக்கும் அனைவரும் நல்ல அனுபவங்களைப் பெற்று உள்ளோம் என்றும், மேலும் இதனை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் புருிந்துகொண்டோம்” என்றும், அவர் தெரிலித்து உள்ளார்.
ஏற்கனவே, “மெடாவின் நிறுவனமான ஃபேஸ்புக்கின் சந்தை மதிப்பு சில நாட்களுக்கு முன் 200 பில்லியன் டாலர் குறைந்து, ஒட்டுமொத்த வருமானத்தில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்ட நிலையில், விர்ச்சுவல் உலகில் கூட்டுப் பாலியல் பலாத்கார புகார் தற்போது சுமத்தப்பட்டு இருப்பது, அதன் சந்தை மதிப்பை மேலும் குறைக்கூடும்” என்றே கூறப்படுகிறது. இச்சம்பவம், உலகம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது.