அய்யயோ.. “ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றலை கொரோனா வைரசால் சற்றே குறைகிறது!” ஆய்வில் அதிர்ச்சி..
“கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஆண்களின் கருவுறச்செய்யும் ஆற்றல் சற்றே குறைவதாக” ஆய்வில் தெரிய வந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ்.
அதாவது, உலகம் முழுவதும் 3 வது அலையாக தீவிரமாக பரவிக்கொண்டு இருக்கும் கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று வைரசானது, அடுத்தடுத்து மரபணு மாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என்று, பல வகைகளிலும் தொடர்ச்சியாக பரவி வருகிறது.
இதனால், உலகம் முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பீதி அடைந்ததுடன், மிக கடுமையாகவும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு, இது தொடர்பாக ஏற்படும் இறப்பு விகிதமும் தொடர்ச்சியாக மீண்டும் அதிகரித்து உள்ளது.
இப்படியாக டெல்டா, ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் தொற்று வெவ்வேறு மாறுபட்ட வடிவங்களில் பரவி வரும் இந்த சூழலில், ஒமைக்ரானின் மாறுபட்ட வைரஸ் வகை ஒன்று சமீபத்தில் அதி வேகமாகப் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
என்றாலும், இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், தற்போது தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு, அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது என்றும், கொரோனா வைரஸ் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றலைக் குறைக்கிறது” என்றெல்லாம் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இது குறித்து அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் ஆண்டனி பாசி, விளக்கம் அளித்து உள்ளார்.
அதன் படி, “கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவல்” என்று, டாக்டர் ஆண்டனி பாசி, கூறி உள்ளார்.
அத்துடன், “கொரோனா தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், முந்தைய ஆய்வுகளும் எடுத்துக் காட்டுகிறது என்றும், கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை” என்றும், டாக்டர் ஆண்டனி பாசி, விளக்கம் அளித்து உள்ளார்.
அதே நேரத்தில், “கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது” என்றும், டாக்டர் ஆண்டனி பாசி, தெரிவித்து உள்ளார்.
“ஆனால், இந்த பிரச்சினை தற்காலிகமானது” என்றும் விளக்கம் அளித்துள்ள டாக்டர் ஆண்டனி பாசி, “அது கொரோனா தொற்று நோயுடன் தொடர்புடையது என்றும், ஆனால் தடுப்பூசியால் அல்ல” என்றும், டாக்டர் ஆண்டனி பாசி, விளக்கம் அளித்து உள்ளார்.
இதனிடையே, “கொரோனா வைரசால் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் சற்றே குறைகிறது” என்றும், டாக்டர் ஆண்டனி பாசி, தெரிவித்து உள்ளது, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலரும் கடும் அதிர்ச்சியும், பீதியும் அடைந்து உள்ளனர்.