“உடலுறவின் போது திருட்டுத்தனம்.. துணையின் சம்மதம் இல்லாமல் ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம்..!” வருகிறது புதிய சட்டம்..
By Aruvi | Galatta | Feb 14, 2021, 07:19 pm
“உடலுறவின் போது திருட்டுத்தனமாகத் துணையின் சம்மதம் இல்லாமல், ஆணுறையை அகற்றுவது சட்ட விரோதம்” என்றும், புதிய சட்டம் விரைவில் வர இருக்கிறது.
அமெரிக்காவில் தான், இப்படி ஒரு சட்டம் வர இருக்கிறது.
அமெரிக்காவில் ஆணும் - பெண்ணும் உடலுறவு இன்பம் கொள்ளும் போது, தொடர்ச்சியாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், “உடலுறவு இன்பத்தின் போது, துணை ஒருவரது சம்மதம் இல்லாமல், ஆண் ஒருவர் தான் அணிந்திருக்கும் ஆணுறையை அகற்றுவது சட்ட விரோதம் என்று தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் அந்நாட்டில் எழுந்து உள்ளன.
இது, பாலியல் பலாத்காரத்துக்குச் சமம் என்றும் தொடர்ச்சியாக அந்நாட்டில் கருத்து முன்வைக்கப்பட்டுக்கொண்டே வந்தன.
அத்துடன், இதற்கென்று தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல்களும், அந்நாட்டில் நீண்ட நாட்களாக எதிரொலித்துக்கொண்டே இருந்தன.
இப்படியாகத் தொடர்ச்சியாக இது தொடர்பாகக் குரல்கள் எழுந்துகொண்டே இருந்ததால், ஆணும் - பெண்ணும் உடலுறவு இன்பம் கொள்ளும் போது, துணை ஒருவரது சம்மதம் இல்லாமல், மற்றொரு துணை அணிந்திருக்கும் ஆணுறையை அகற்றுவது சட்ட விரோதம் என்பதனை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில், விரைவில் சட்டமாக ஆக்கப்பட உள்ளன.
இதற்கென்று, அந்நாட்டின் சட்டப் பிரிவான AB 453 என்ற இந்த புதிய மசோதா கலிபோர்னியா மாகாணத்தில், கொண்டுவரப்பட இருக்கின்றன.
மேலும், அனுமதி இன்றி துணையின் சம்மதம் இன்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி, சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும், உணர்ச்சி ரீதியான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும் என்றும், கூறப்படுகிறது.
அத்துடன், ஆணுறையை அகற்றும் விவகாரத்தைச் சட்ட ரீதியாகத் தடுப்பது குறித்து, அந்நாட்டில் ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினரான கிறிஸ்டினா கார்சியா பேசும் போது, “இத்தகையச் செயலைச் செய்பவர்களை தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பாக்கும் வரை நான் ஓயப்போவதில்லை என்றும், ஆன்லைன் சமூக ஊடகங்களில் இன்னொருவருக்குத் தெரியாமல் எப்படி ஆணுறையை உடலுறவின் போது அகற்றுவது குறித்த ஆலோசனைகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “துணையின் சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவதை ஊக்குவிக்க முடியாது என்றும், ஆனால் சட்டத்தில் இது ஒரு குற்றம் என்பதாக இது வரை எதுவும் இல்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“இப்படியான திருட்டுத் தனமாக ஆணுறையை அகற்றும் செயல் பற்றிக் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்ட ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் செக்ஷுவல் ஹெல்த் செண்டர், “மூன்றில் ஒரு பெண்ணும், ஐந்தில் ஒரு ஆணும் உடலுறவின் போது இது போன்று நடவடிக்கையில் ஈடுபட்டு, தனது துணையை ஏமாற்றப்பட்டதாகவும்” அவர், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இந்த செய்தி, அமெரிக்காவையும் தாண்டி, மற்ற உலக நாடுகளின் மத்தியில் வைரலாகி வருகிறது.