இலங்கையில் இனி யாசகம் எடுத்தாலும் கொடுத்தாலும் தண்டனை!
By Aruvi | Galatta | Nov 19, 2020, 09:25 pm
யாசகம் பெறுவது மற்றும் வழங்குவது தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகக் கருதப்படும் என இலங்கையில் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கூறி பரப்பரப்பை கிளப்பியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியுள்ளது, ‘’ கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் யாசகம் பெறுவோரில், 95 வீதமானோர் உண்மையான யாசகர்கள் கிடையாது.
யாசகர்ளை ஒருவர் வழிநடத்துவதாகவும் மேலும் யாசகர்களுக்கு யாசகம் எடுக்க தினசரி பணம் கொடுப்பதாகவும் விசாரணயில் தெரியவந்திருக்கிறது. அந்த வழிநடத்தும் நபர் பற்றின விபரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் கைது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். இவர்கள் பெரும்பாலும் சாலையில் சிக்னல் விழும் நேரங்களில் யாசகம் பெருகிறார்கள்.
இவர்களுக்கு ஓட்டுநர்களோ அல்லது வாகனங்களில் செல்வோர் யாசகம் வழங்குவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கையால் உண்மையான யாசகர்கள் பாதிக்கப்பட்ட மாட்டார்களா? என்ற கேள்விக்கு அவர், ‘’ உண்மையாக யாசகம் பெறுவோர் எவரும் பிரதான நகரங்களிலும், சாலைகளிலும் யாசகம் பெறுவதில்லை. அவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றுள்ளார்.
இலங்கையில் கொரோனா பரவலின் தீவிரம் இன்றளவும் குறையாதவாறு இருக்கிறது. மேலும் இலங்கையில் பல யாசகர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்பட்டது. யாசகர்கள் பெரும்பாலும் பொதுஇடங்களில் தான் தங்கியிருப்பார்கள். அவர்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள இடமும், விழிப்புணர்வு மிக குறைவு என்பதால் கொரோனா நோய் தொற்று மேலும் தீவிரமடையும். இந்த நடவடிக்கையால் இதையும் தடுக்க உதவும் எனவும் சொல்லப்படுகிறது.