அரசு பஸ்சில் அடாவடி செய்த போதை பெண்: கதறிய பயணிகள்...!

அரசு பஸ்சில் அடாவடி செய்த போதை பெண்: கதறிய பயணிகள்...! - Daily news

அரசு பேருந்தில் குடித்துவிட்டு போதையில் சக பயணிகளை ஆபாசமாக பேசிய பெண்ணால் பரபப்பானது.

govt bus

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி 50 பயணிகளுடன் கோவை போக்குவரத்து கழக பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூரில் சாந்தி என்ற பயணி அந்த பஸ்ஸில் ஏறி முன்புற படிக்கட்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தார். அவரோடு வேட்டி சட்டை அணிந்த ஒரு நபரும் பயணித்தார். அவர் அந்த பெண்ணின் வீட்டில் பணியாற்றும் தோட்டக்காரராம்.

அதனைத்தொடர்ந்து பஸ் மெதுவாக போய்க்கொண்டிருந்தது போது  ஒரு விதமான வித்தியாசமான வாசம் வந்திருக்கிறது. அது மதுபான வாசம் என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். ஆனால் யார் குடித்திருக்கிறார் என்பது யாருக்கும் அறிந்திரவில்லை. இந்நிலையில் தான் பேருந்தில் இருந்த சாந்தியின் பேச்சும் மாறியது. தன்னுடன் வந்த பணியாளரை ஒருமையில் திட்ட தொடங்கினார் சாந்தி. காதில் கேட்க முடியாத ஆபாச வார்த்தைகளால் உடன் வந்தவரை ஒருமையில் பேச தொடங்கினார்.

இதனைக்கண்ட பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.  மேலும் நேரம் செல்லசெல்ல வார்த்தைகளின் வக்கிரம் உச்சத்தில் சென்றது. தட்டிக் கேட்கலாம் என சிலர்பேச முற்பட்டபோது  அவர்களை நோக்கி சாந்தி திட்ட தொடங்கினார். இதனால் சகபயணிகள் நமக்கென்ன என இறந்துவிட்டனர். மேலும் தட்டி கேட்ட  நபர்களை எத்தனை பேர் வந்தாலும், அத்தனை பேரையும் ஒருமையில் வாங்கடா  என தனி பெண்ணாக திட்டி தீர்த்தார் சாந்தி.

மேலும் பேருந்தில் இருந்த பெண்கள் சிலரும் அவரை கட்டுப்படுத்த முயற்சித்து தோல்வியில்  கடுப்பாகி அமர்ந்தனர். சாந்தியை சாந்தப்படுத்த பேருந்து நடத்துனர், ஓட்டுநர் எல்லாரும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வந்ததும், பேருந்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பயணிகள் கூறினார். இதுக்கு மேல் காது குடித்து கேட்க முடியாது என்று அவர்கள் புலம்பினர். டிரைவருக்கும், கண்டக்டருக்கும் அதே நிலையே. எனவே பேருந்து வேடசந்தூர் காவல் நிலையம் சென்றது. பஸ்ஸில் இருந்து பந்தாவாக இறங்கிய சாந்தி மீண்டும் ஆபாச வார்த்தைகளால் பேசத்தொடங்கினார். 

சாந்தி ஒருமையில் பேசியது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் புலம்பித் தீர்த்தனர் பயணிகள். சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன் என அவர்களை ஆறுதல் படுத்தி அனுப்பி வைத்தார் எஸ்ஐ. அதன் பின் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் இனிமே இப்படி பண்ணாதம்மா போய் ஒழுங்க இரு என எச்சரித்து அனுப்பினர். 

Leave a Comment