வைரலாகும் ஆடை பட டீஸர் ! துணிகரமான தோற்றத்தில் அமலா பால்
By Aravind Selvam | Galatta | June 18, 2019 16:19 PM IST
மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் நிறைவடைந்தது இந்த படத்திற்கு A certificate கிடைத்துள்ளது.
தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.இதனை ஹிந்தி திரையுலகின் முன்னணி இயக்குனரான கரண் ஜோஹர் வெளியிட்டுள்ளார்.அமலா பாலின் விறுவிறுப்பான இந்த படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.