விஷாலின் அயோக்யா ரிலீஸ் தேதியில் மாற்றம் !
By Aravind Selvam | Galatta | March 22, 2019 20:09 PM IST
விஷால் தற்போது வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் அயோக்யா படத்தில் நடித்து வருகிறார்.இது தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பார்த்திபன்,கே.எஸ்.ரவிக்குமார்,சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் சில காரணங்களுக்காக இந்த படம் தற்போது மே 10ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறது என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது