விஜயின் சொகுசு கார் வழக்கு...உயர்நீதிமன்றம் வழங்கிய புதிய உத்தரவு !
By Aravind Selvam | Galatta | July 15, 2022 15:23 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வைத்துள்ளார்.இந்த காருக்கான நுழைவு வரி அதிகமாக இருக்க அதற்கு விலக்கு அளிக்கும்படி விஜய் நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கின் தீர்ப்பு சில மாதங்களுக்கு முன் வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் வழக்கை தள்ளுபடி செய்ததோடு , விஜயை கடுமையாக விமர்சித்து பேசி 1 லட்சம் அபராதமும் விதித்திருந்தார்.தீர்ப்பு வந்த சில வாரங்களில் வரிபாக்கியை செலுத்திய விஜய்.தான் கடினமாக உழைத்து வாங்கிய காருக்கு வரிவிலக்கு கேட்டு சட்டப்படி சரியான முறையில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதோடு கடின உழைப்பில் வாங்கிய தன்னை பற்றி நீதிபதி சில கடுமையான விமர்சனங்களை தெரிவித்து தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் என்றும் விஜய் தரப்பில் தெரிவித்திருந்தனர்.அடுத்த விசாரணையில் விஜய் குறித்த விமர்சனங்களை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்கிடையில் விஜய் மொத்த தொகையும் செலுத்திவிட்டு ரசீது ஒன்றும் வைரலாகி வந்தது.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை நீதிமன்றம் முடித்து வைத்தது.இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்.2019-க்கு மேல் வரி செலுத்தவில்லை என்றால் மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் இல்லையென்றால் அபராதம் தேவையில்லை என்று தீர்ப்பளித்து இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது.
Uriyadi fame Vijay Kumar's next film announcement - Cast and crew revealed!
12/07/2022 06:42 PM
New glimpse of Vijay Deverakonda's Liger out now - watch it here!!
08/07/2022 04:55 PM