விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் தற்போதைய நிலை!
By Anand S | Galatta | February 22, 2022 18:30 PM IST
தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளராக திகழும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் காக்கி, தமிழரசன், அக்னிசிறகுகள் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.
இதனையடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார். மேலும் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை ஆகிய திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இதனிடையே அடுத்ததாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வருகிறது ரத்தம் திரைப்படம். பொலிட்டிகல் க்ரைம் திரில்லர் படமாக உருவாகி வரும் ரத்தம் படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் 2 கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது
விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகைகள் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் என்.கண்ணன் இசையமைக்கிறார். இந்நிலையில் ரத்தம் படத்தின் தற்போதைய நிலை குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியானது.
இயக்குனர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ரத்தம் படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடைபெறும் விடியோவை பகிர்ந்து,2 கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது, கொல்கத்தா மற்றும் ஸ்பெயினில் நடைபெறவுள்ள 3-வது கட்ட ஷூட்டிங் மட்டும் மீதமுள்ளது" என தெரிவித்துள்ளார். விரைவில் இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
A little peek into the soundscape of #Ratham . 2 schedules done, just one to go in Kolkota & Spain. Hurtling along :) @vijayantony @FvInfiniti pic.twitter.com/418aqrDiEg
— CS Amudhan (@csamudhan) February 22, 2022
'Thalapathy' Vijay's car insurance controversy - Official statement released!
21/02/2022 03:05 PM
Here is an interesting DELETED Scene from Kadaisi Vivasayi | Vijay Sethupathi
21/02/2022 12:23 PM