“நான் மலேசியாவில் இருக்கேன்.. இங்க அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..” விபத்தின் போது மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி.. – முழு வீடியோ இதோ..

பிச்சைக்காரன் 2 விபத்திற்கு பின் தன் மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி - Vijay antony about his wife reaction after that accident | Galatta

விஜய் ஆண்டனி ஹீரோவாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த பின் இயக்குனராக அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2. விஜய் ஆண்டனி திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படத்தை விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து இசையமைத்து மற்றும் படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படம் குறித்து முன்னதாக வெளியான பாடல்கள். முன்னோட்டம் இப்படத்தின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்கலினி ஆதரவை பெற்ற பிசைக்காறான் திரைப்படம் வரும் மே 19 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பெரிய விபத்து குறித்தும் அந்த விபத்தையடுத்து அவரது குடும்ப சூழல் குறித்தும் பகிர்ந்து கொண்டார். மற்றும் அவர் கடந்து வந்த பாதைகள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

"வீட்ல எல்லோரும் ஷாக் ஆயிட்டாங்க.. நான் வந்து அவங்கள சத்தம் போடுறேன்.. நல்லா இருக்கேன் நான் புரிஞ்சிக்க மாட்டீங்களா.. அப்படினு கத்துறேன்.. நான் அப்போ பயந்துட்டு இருந்தா என்னாகிருக்கும்.‌ நான் தைரியமா இருக்கேன்..

எனக்கு அப்போ வாய் இறங்கி இருந்தது. அப்போ கூட நான் முயற்சி செஞ்சு அவங்க கிட்ட என் உடம்பு பத்தி சொல்ல முயற்சித்தேன்..  நான் சொன்ன விதம் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்துச்சு.. நான் நிஜமாவே நல்லாதான் இருக்கேன்.." என்றார். மேலும் தொடர்ந்து  "இப்போ கூட மனைவி அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிய வரல.. அன்னிக்கு அவங்க இங்க இருந்தாங்க.‌ நான் மலேசியாவில் சிகிச்சையில் இருந்தேன். லோக்கல்னா கூட வந்து பாத்துடலாம்.. உடனே மலேசியா போய் பாக்க முடியாது‌..‌ வந்து பார்க்குற வரை அவங்க உடைஞ்சு போய் தொடர்ந்து அழுதுட்டு இருந்திருக்காங்க..  இப்போ கூட அந்த நிகழ்வில் இருந்து மெதுவாதான் மீண்டு வராங்க.. இப்போ பரவாயில்லை.." என்றார் விஜய் ஆண்டனி.

மேலும் விஜய் ஆண்டனி அவர்கள் பிச்சைக்காரன் படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் அடங்கிய முழு வீடியோ இதோ..

 

Super deluxe இயக்குனரின் அடுத்த படைப்பு... தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி - இணையத்தில் வைரலாகும் அப்டேட்... விவரம் இதோ..
சினிமா

Super deluxe இயக்குனரின் அடுத்த படைப்பு... தமிழில் மீண்டும் ஒரு ஆந்தாலாஜி - இணையத்தில் வைரலாகும் அப்டேட்... விவரம் இதோ..

“என் முகத்துல 9 பிளேட் வெச்சிருக்காங்க..” படப்பிடிப்பில் எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விஜய் ஆண்டனி.. – Exclusive Interview இதோ...
சினிமா

“என் முகத்துல 9 பிளேட் வெச்சிருக்காங்க..” படப்பிடிப்பில் எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விஜய் ஆண்டனி.. – Exclusive Interview இதோ...

வடசென்னை 'பத்மா' கதாபாத்திரம் போல...
சினிமா

வடசென்னை 'பத்மா' கதாபாத்திரம் போல..." ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் - முழு வீடியோ உள்ளே..