தமிழ் திரையுலகில் எதார்த்த படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரிக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். 

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோயினாக நடித்தார் நயன்தாரா. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவுவதை பார்க்க முடிகிறது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கூலாக இருந்து வருகின்றனர் விக்கி மற்றும் நயன்தாரா. 

லாக்டவுன் முடிந்ததும் ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார். இருவரும் இறங்கி நடந்து சென்றதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். கொச்சிக்கு சென்ற காதல் ஜோடி சமீபத்தில் கோவாவுக்கு சென்றது. கோவாவில் நயன்தாராவின் தயார் பிறந்தநாளை கொண்டனர். 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ரெக்கி பார்க்க சென்றுள்ளார் விக்னேஷ் சிவன். படத்திற்காக லொகேஷன் பார்க்க ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனோடு சென்றுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையில் கடையம் என்ற ஊருக்கு சென்றுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை பார்த்த ரசிகர்கள், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக லொகேஷன் பார்க்க சென்றுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Cheers 🍻 brother @vijaykartikkannan #locationscouting #tamilnadu #nofilter #shotoniphone

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on