'நயன்தாராவை வைத்து ROMANTIC SCENE எடுக்கும் போது..!'- இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் செம்ம பதில்! வீடியோ இதோ

இருவரில் யார் POSSESSIVE என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனின் பதில்,vignesh shivan about possessiveness in relationship with nayanthara | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  கடைசியாக வெளிவந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து தனது அடுத்த படத்தில் முதல் முறையாக அஜித் குமார் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவதாக அறிவிப்பு வெளியானதால் ரசிகர் உற்சாகமடைந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த கூட்டணி இணையாதது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தாலும் விரைவில் அஜித் குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஒரு படம் கட்டாயமாக வரும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் இப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படங்களில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில், பிரபல யூடியூப் ஜோடியான ராம் மற்றும் ஜானு இருவரும் கலந்து கொண்டு நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் மற்றும் வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான கேள்விகளை கேட்டனர். அந்த வகையில்,

உங்கள் இருவரில் யார் மிகவும் POSSESSIVE? எனக் கேட்டபோது, “இருவருமே மிகவும் PRACTICAL! POSSESSIVE என்பது வந்து ஒரு புள்ளிக்கு மேல் அந்த POSSESSIVENESSஏ ஒரு பெரிய விஷயமாகி விடுகிறது. அதனாலேயே நிறைய சிக்கல்கள் இருக்கும். அதற்கு பதிலாக சரியான சமநிலை இருந்தால் நன்றாக இருக்கும். எனக்கு அந்த சமநிலை இருக்கிறது, எங்களுக்குள் அந்த சமநிலை இருக்கிறது. அவர்களை வந்து.. நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் கூட என்னால் அவர்களை சரியாக நடிக்க வைக்க முடியும். ஒரு ஹீரோ ஹீரோயின் வைத்து நான் இப்போது ரொமான்டிக்காக ஒரு சீன் எடுக்கிறேன் என்றாலும் இயக்குனராக என்னுடைய வேலையை செய்வேன். அந்த இடத்தில் நான் தான் இயக்குனர் என்பதற்காக அதை மாற்றியோ அல்லது எனக்கு ஏற்ற மாதிரி அதை வளைத்து நெளித்து அந்த மாதிரி எதையும் செய்ய மாட்டேன். அதேபோல் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலுமே, அந்த வேலையை நாம் மிகவும் மதிக்க வேண்டும். மேலும் ஒரு ஆணாக ஒரு பெண்ணிற்கு அந்த சுதந்திரமும் அந்த இடமும் கொடுப்பதுதான் POSSESSIVENESS. அவர்களுக்கு பிடித்தது என்னென்ன அவர்களுக்கு சந்தோஷம் எது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை விடுவது செய்ய தான் POSSESSIVENESS.” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

துல்கர் சல்மானின் மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரம்... கிங் ஆஃப் கோதா பட அதிரடியான ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரம்... கிங் ஆஃப் கோதா பட அதிரடியான ஷூட்டிங் அப்டேட் இதோ!

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!
சினிமா

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!
சினிமா

'எனக்கு தங்கம் பரிசளித்த முதல் ஹீரோ லாரன்ஸ் தான்!'- சந்திரமுகி 2 பட மாஸ் அப்டேட் கொடுத்த ராதிகா சரத்குமார்... வைரலாகும் Shooting Spot புகைப்படங்கள் இதோ!