"எனக்கு இரண்டு முகம் இருக்கு..” வெற்றி மாறன் பகிர்ந்த அட்டகாசமான தகவல் - Exclusive Interview இதோ..

விடுதலை படம் குறித்து சுவாரஸ்யங்களை பகிர்ந்த வெற்றிமாறன் முழு வீடியோ இதோ - Vetrimaaran about why viduthalai directors cut | Galatta

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் ‘விடுதலை’ பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சிறப்பு கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் கௌதம் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பவானி ஸ்ரீ, இளவரசு, பிரகாஷ் ராஜ், சேத்தன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 31 ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இரண்டாம் பாகம் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கி இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ஜீ 5 தளத்தில் ‘viduthalai director’s cut’ என்ற பெயரில் விடுதலை முதல் பாகம் வெளியானது. வெற்றிகரமாக ஓடிடியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு விடுதலை directors cut குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர்.

அதில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன்,  “என்னுள் இரண்டு மனிதர்கள் உள்ளனர். ஒன்று பாலுமகேந்திரா சாரிடம் பயின்ற மாணவன். அவனுக்கு Slow Paning செய்து காட்சியை மெதுவாக கொண்டு வந்து பொறுமையாக கதையின் முடிச்சுகளை அவிழ்பது பிடிக்கும். இன்னொருவன் உலகமயமாதலுக்கு பாதிக்கப்பட்ட தலைமுறையை சேர்ந்தவன். அவனுக்கு எல்லாமே விறுவிறுப்பாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவன். முன்பெல்லாம் மக்கள்  8.30 மணிக்கெல்லாம் தூங்க செல்வார்கள் 10.30 ஆகினாலே ரொம்ப நேரம் தூங்காம இருக்கனு பேசுவாங்க.. அது வசதியான அமைதியான ஆரோக்கியமான வாழ்வியல். இப்போது உலகமயமானதில் இருந்து  நிறைய அழுத்தங்கள் வருகின்றது. அது எல்லாம் நம்மை அழுத்தி வேகமாக ஓட சொல்கிறது.

என்னை பொறுத்தவரை ஏன் ஓடுகிறோம் என்றே தெரியவில்லை.. வேக வேகமா இருக்கும் அழுத்தங்கள் நிறைந்து இருக்கின்றோம். முகம் தெரியாத மனிதருடன் போட்டி போட வேண்டி உள்ளது. நான் ஏன் முகம் தெரியாத மனிதருடன் போட்டி போட வேண்டும். அப்போதெல்லாம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்ட உயர்தர பிராண்டட் பொருட்கள் மக்கள் கொண்டு வந்து அண்ணா சாலை பக்கம் வெளியே அதை துவைத்து விற்பார்கள். அந்த நேரம் நம்மால் அனைவராலும் அதை வாங்க முடிந்தது.  இப்போ வர்த்தகம் விரிவடைந்த பின்  5000 ரூபாய் ஜீன்ஸ் வாங்க முடியுமா னு போட்டி போடுறாங்க.. நான் ஏன் போட்டி போடனும். விளம்பரங்கள் எல்லாம் போட்டு அழுத்தங்கள் அதிகமாகின்றது. அந்த அழுத்தங்கள் கொண்ட ஒரு மனிதன் என்னுள் இருக்கின்றான். அவனுக்கு எப்போதும் சீக்கிரம் ஒரு விஷயத்தை முடிக்க வேண்டும் என்று நினைப்பவன். படத்தொகுப்பிலும் அப்படிதான்.. என்னதான் பொறுமையா படம் எடுத்தாலும் எடிட்டிங் போது கட் கட் பண்ணிட்டு போறேன்.. அப்படிதான் என் மூளையும் வேலை செய்கிறது. இதனிடையே இந்த இரண்டு மனிதருக்கு இடையே திரையரங்கிற்கு இப்படி பண்ணுவோம்.. இந்த ஸ்டைல் ல ஒன்று முயற்சி செய்து பார்ப்போம் என்று தோன்றியது. இந்த படத்திற்கும் சொன்னார்கள் படம் கொஞ்சம் ஸ்லோ தான்.. ஆனால் ஓகே.. என்றனர். படத்தை இயற்கையாகவே அதன் இயல்பில் முடிக்க முயற்சி செய்கிறோம். இது இந்த மாதிரியான வழியை கொடுக்கிறது. காட்சியை சேர்ப்பதனால் மட்டுமல்ல படத்தில் என்ன சொல்ல வரவேண்டும் என்பதை சொல்ல முடியும்..

மேலும் இயக்குனர்கள் இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் விடுதலை Directors Cut குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அந்த மனசு இருக்கே..”.. விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்.. – அஜித் ரசிகர்கர்களால் வைரலாகும் பதிவு இதோ..

வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித் குமார் விடாத ‘வி’ Sentiment.. – Birthday special கட்டுரை இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித் குமார் விடாத ‘வி’ Sentiment.. – Birthday special கட்டுரை இதோ..

“அப்பாகிட்ட மட்டும் தான் இதை சொல்ல முடியும்” ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவி - கலகலப்பான நேர்காணல் இதோ..
சினிமா

“அப்பாகிட்ட மட்டும் தான் இதை சொல்ல முடியும்” ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவி - கலகலப்பான நேர்காணல் இதோ..