சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் என்டர்டைனராக வெளிவர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இயக்குனர் நெல்சனின் ஸ்பெஷலான HUMOUR விஷயங்கள் இருக்குமா என்ற கேள்விக்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் வசந்த் ரவி மனம் திறந்து பேசி இருக்கிறார். என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த நாயகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஸ்டைல் மற்றும் இயக்குனர் நெல்சனின் தனித்துவமான டார்க் காமெடி இணைந்து செம்ம ட்ரீட்டாக ஜெயிலர் ரசிகர்களை கவர காத்திருக்கிறது.
இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் வசந்த் ரவி மற்றும் நடிகை மிர்னா மேனன் கலந்துகொண்டு நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், “எல்லோருக்கும் இருக்கும் ஒரு கேள்வி என்னவென்றால் இதில் இயக்குனர் நெல்சன் அவர்களின் அந்த காமெடி விஷயங்களை இருக்கிறதா? இல்லையா?” எனக் கேட்டபோது, “கண்டிப்பாக இருக்கும் அது இல்லாமல் எப்படி இருக்கும் நெல்சன் சாருடைய இயக்கத்தில் அது மிக முக்கியமானது அல்லவா.. அவருடைய இயல்பே அதுதான். அவருடைய படங்களில் அந்த எண்டர்டெய்னிங் விஷயங்கள் இருக்கும். அதில் நகைச்சுவை இல்லாமல் அவர் படமே பண்ண மாட்டார் எனக்கு தெரிந்து, இதற்குப் பிறகும் அப்படி நகைச்சுவை இல்லாமல் எல்லாம் படம் பண்ண மாட்டார். அவருடன் நான் பேசிய சமயங்களிலும், சீரியஸான விஷயங்களையும் கூட அங்கு ஒரு சிறிய FUN வைப்பதற்கான காரணம் என்னவென்றால் அவருக்கு அது பிடித்திருக்கிறது, அப்போது தான் தொடர்ந்து ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருவார்கள் என்கிறார்” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.