வாரிசு பட கதையில் விஜய் தவிர வேறு யாராவது நடிக்க வைக்க முடியுமா? – இயக்குனர் வம்சி விளக்கம்.. முழு வீடியோ இதோ..
By Vijay Desing | Galatta | January 11, 2023 14:10 PM IST
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கிய வாரிசு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பொங்கலை யொட்டி குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவான வாரிசு திரைப்படத்தின் கொண்டாட்டங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதனையடுத்து வாரிசு படத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபள்ளி அவர்கள் நமது கலாட்டா பிளஸ் பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார்.
இதில் விஜய் நடித்த வாரிசு கதையில் வேறு ஒரு நட்சத்திரத்தை பயன்படுத்தி உருவாக்கிட முடியுமா? என்ற கேள்விக்கு
“நிச்சயமாக முடியாது, ஒரு கமர்ஷியல் இயக்குனராக கதையின் கருவை நான் என் எதிரே உள்ள நட்சத்திரத்திடம் முதலில் சொல்கிறேன். அவரிடம் தெளிவாக இதுதான் கதை, இதுதான் கதையின் சாரம் என்று தெளிவாக சொல்கிறேன். உதாரணமாக தளபதி விஜய் க்கு அந்த கதை பிடித்து விட்டால், அதன் பின் அந்த கதையில் தளபதி விஜய் ரசிகர்களுக்கான பிரத்யேக சுவாரஸ்யமான மசாலாக்களை கதையின் சாரம் கெடாமல் சேர்க்கப்படுகிறது. சில நேரம் நட்சத்திரத்திற்கான காட்சிகளை வைக்கிறேன், ஆனால் கதையை கெடாமலும் பார்கிறேன். அப்படி சேர்த்தாலும் அங்கிருந்து கதையில் பார்வையாளர்களை கொண்டு சேர்க்க முயல்கிறேன். அப்படிதான் இந்த வேலை நடக்கிறது. இதற்கு முன்பும் அப்படிதான் நட்சத்திரங்களுக்கான கதையை அமைத்திருக்கிறேன். இதுமூலம் தான் கமர்ஷியல் இயக்குநர்கள் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். நான் வாரிசு கதைக்கருவை விஜய் சாரிடம் சொன்னது மாறாமல் பார்த்து கொள்கிறேன். அது மூலமாக தான் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அது ஒரு நம்பகமான விஷயமும் கூட..இதனிடையே ரசிகர்களுக்கான விசில் அடிக்கும் காட்சிகளையும் சேர்கிறோம்” என்று இயக்குனர் வம்சி குறிப்பிட்டார்.
தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் வரவேற்பு தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் தெலுங்கு டப் படமான 'வாரிசுடு' படம் ஜனவரி 14 ம் தேதி வெளியாகவிருக்கின்றது. இதனையடுத்து அந்த படத்திற்கான முன்பதிவும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.
மேலும் வாரிசு படம் குறித்து இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பகிர்ந்த முழு வீடியோ இதோ..