தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோக்களான தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் இந்த பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரி 11-ம் தேதி ரிலீஸாகின்றன. சாதாரணமாக இவர்களில் ஒருவரது படம் வெறும் சாதாரண தினத்தில் வெளிவந்தாலே திருவிழா தான்.

ஒருவேளை பண்டிகை சமயங்களில் வெளியானால் இன்னும் கலை கட்டும். அதுவும் இருவரின் திரைப்படங்களும் ஒரே பண்டிகை சமயத்தில் ஒரே நாளில் வெளியானால் கொண்டாட்டங்கள் குறித்து விவரிக்க வார்த்தைகளை இல்லை என சொல்லலாம். அப்படியான அனைத்து கொண்டாட்டங்களுக்கும் தற்போது வரும் பொங்கலுக்கு ரசிகர்கள் ரெடியாகிவிட்டார்கள்.

துணிவு மற்றும் வாரிசு என இரண்டு திரைப்படங்களின் ட்ரெய்லரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் அவர்கள் வாரிசு திரைப்பட படப்பிடிப்பு அனுபவங்கள் குறத்தும் மற்றும் தளபதி குறித்தும் உற்சாகமான விஷயங்களை நமது கலாட்டா சேனலின் பிரத்யேக பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகின்றன. துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தீர்களா..? அதில் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? எப்படி இருந்தது எனக் கேட்டபோது,

“முதலில் அவரது லுக் சூப்பராக இருக்கிறது. எந்த சந்தேகமும் இல்லை சூப்பராக இருக்கிறார். அதில் வந்து.. அந்த ட்ரெய்லரில் ஒரு டான்ஸ் மாதிரி ஒன்று... அந்த துப்பாக்கி வைத்துக் கொண்டு ஒரு SWING பண்ணி இருப்பார் அதில் ஒரு சின்ன SWAG இருக்கும் பார்த்தீர்களா..? அது ரொம்ப பிடித்தது அவருடைய கதாபாத்திரத்தில் எப்படி இருக்கிறார் என்பது இருந்தது. அது எனக்கு ரொம்ப பிடித்தது. ஆனால் ஒருவேளை நான் நடன இயக்குனர் என்பதால் அது நமக்கு அப்படி தோன்றியதா என்ன என்று தெரியவில்லை. ஆனால் பாருங்களேன் ஒரு ட்ரெய்லரில் பொதுவாக ஒரு ஆக்ஷன் ட்ரெய்லரில் துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு அவர் செய்வது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா” என தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ஷோபி மாஸ்டரின் அந்த முழு பேட்டி இதோ…