தமிழ் சினிமா இளம் நடிகைகளில் நட்சத்திர அந்தஸ்து பார்க்காமல் கதைக்கு தேவையான கதாபாத்திரத்தை ஆத்மார்த்தமாக நடித்து கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் விதத்தில் நடித்து கொடுத்து மக்களின் பேராதரவை பெறுபவர் வரலக்ஷ்மி சரத்குமார். அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் திரைத்துறையில் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ மற்றும் ‘கொன்றால் பாவம்’ ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் மீடியா ஏற்பாடு செய்திருந்த வரலக்ஷ்மி சரத்குமார் ரசிகர் கூட்டத்தின் அமர்வில் கலந்து கொண்ட வரலக்ஷ்மி சரத்குமார் தனது ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார் மேலும் பல சுவாரஸ்யமான கேல்விகளுக்கு அட்டகாசமான பதிலை கொடுத்து அசத்தியிருப்பார்.
இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குறித்து பேசும்போது உங்களை லேடி மக்கள் செல்வன் என்று அழைப்பது குறித்து கேட்கையில் அதற்கு அவர்,
"நானும் கேள்வி பட்டிருக்கேன்.அவர் ஏற்கனவே மக்கள் செல்வன். எனக்கு மக்கள் செல்வி னு பேர் வெச்சிட்டாங்க.. அப்படி அழைப்பது எனக்கும் மகிழ்ச்சியை தருகிறது. அவரும் நானும் எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கோம். ஒரு ஸ்டாருக்கும் நடிகனும் உள்ள வித்யாசம் அதுதான்.. ஒரு நடிகனா எது தீனி போடுதோ அதுதான் நல்ல நல்ல கதாபாத்திரம் எனலாம்.நாங்கள் மைக்கேல் படத்தில் ஒன்றாக பணியாற்றினோம். அப்பொதெல்லாம் நாங்கள் வாழ்க்கை, வேலை,சாப்பாடு பற்றி தான் அதிகம் பேசுவோம்.” என்றார் வரலக்ஷ்மி சரத்குமார்.
மேலும் சிலம்பரசன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கையில், “நாங்க நான்கு மாதம் லண்டனில் இருந்தோம். அதனால் எனக்கும் சிம்புவிற்கு இடையேயான நினைவுகள் அதிகமாக இருக்கிறது. விக்னேஷ் சிவன், சிம்பு நாங்கெல்லாம் அப்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம். முதல் முதலில் நான் சிம்புவை மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். அப்போது நான் நடிகையெல்லாம் இல்லை. அப்பாவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். நிகழ்ச்சியில் சந்தித்ததற்கு பின் சிம்பு விக்னேஷ் சிவனிடம் என்னை பற்றி சொல்லி அறிமுகபடுத்த, அதுக்கப்புறம் வந்த வாய்ப்பு தான் போடா போடி திரைப்படம்” என்றார்.
மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வரலக்ஷ்மி சரத்குமார் அவர்களின் fans meet வீடியோ இதோ..