மக்களின் மனம் கவர்ந்த நடிகரான வைகைப்புயல் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து முதல் முறை மனம் திறந்து பேசி இருக்கிறார். இதுவரை வைகைப்புயல் வடிவேலுவை இப்படி ஒரு லுக்கில் பார்த்ததே இல்லை என சொல்லும் அளவிற்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மாமன்னன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். முதல்முறையாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு இணைந்து மாமன்னன் படத்தில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் இருந்து ஒட்டு மொத்த திரை உலகிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இணைந்தது இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியதை தொடர்ந்து ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்ததால் மாமன்னன் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் அதிகரித்தது.
தனது முந்தைய படங்களான பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த அழுத்தமான திரைப்படமாக இயக்குனர் வாரி செல்வராஜ் உருவாக்கி இருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, செல்வா.RK படத்தொகுப்பு செய்திருக்கிறார். இந்த ஜூன் மாத இறுதியில் மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாமன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த இசை வெளியீட்டு விழா தொடங்குவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தனது கதாபாத்திரம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.
அப்படி பேசுகையில்,
“இந்த படம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி அவர்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் பெரிய சிறந்த நட்சத்திரங்கள் எல்லோரும் இதில் நடித்திருக்கிறார்கள். ஃபகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், உதய் சார், உங்கள் வீட்டுப் பிள்ளை நான் வடிவேலு... இயக்குனர் மாரி செல்வராஜ், இதில் ஒரு நல்ல கதை களத்தை அமைத்திருக்கிறார். இதை எல்லாருடைய வாழ்க்கையிலும் தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல கதை இது.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “இந்த படத்தில் நகைச்சுவை இருக்கிறதா?” எனக்கு கேட்ட போது, “எல்லாமே இருக்கிறது ஏற்கனவே இந்த படத்தை வைத்து 100 கதைகள் சொல்லிவிட்டீர்கள் எல்லோரும்… வில்லனாக நடிக்கிறார்.. கற்பழிக்கிறார் என ஒருத்தர் போடுகிறார். அப்புறம் துப்பாக்கியோடு திரிகிறார்... கொலை பண்ணுகிறார் என எல்லாமே நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் கிடையாது ஒரு நல்ல சிறந்த குணசித்திர கதாபாத்திரம் இது. நல்ல கதாபாத்திரம் இது. வில்லன் மாதிரியும் இருக்கும் எல்லாமே… சுயமரியாதை கலந்த ஒரு கதை. நன்றாக இருக்கும் நல்ல படம் இது."
என தெரிவித்திருக்கிறார். வைகைப்புயல் வடிவேல் அவரஎனக் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.