உலகளவில் கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபரில் உலகின் மிக பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாலாரானர். இதனையடுத்து எலான் மஸ்க் மீது வலைதளத்தில் பல இடங்களில் விமர்சங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து எலான்  மஸ்க் பல அதிரடி சம்பவங்களை ட்விட்டரில் செய்து வந்தார். குறிப்பாக நிர்வாக குழு மொத்த மொத்தமாக கலைக்கப்பட்டது.  மேலும் பிரபலங்கள் பேசு பொருளாய் இருப்பவர்களுக்கு ட்விட்டர் ஊடகம் கொடுக்கும் புளு டிக்கிற்கு கட்டணம் என பல செயல்களை செய்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் அந்த நடவடிக்கை குறித்த  நயாண்டித்தனமான ட்வீட்டும் பதிவேற்றி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல செய்து பேசு பொருள் ஆனார். இது தொடர்பாக ட்விட்டர் வாசிகள் எலான் மஸ்க்கை வறுத்தெடுத்து வந்தனர்.  இதற்கிடையே பல ஆண்டுகளாக ட்வீட் அல்லது ட்விட்டரின் உள்நுழைவு இல்லாத கணக்குகளை நீக்கப்படுவதாக அறிவித்தார். இதில் 150 கோடி கணக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதன் படி ட்விட்டர் கணக்குக முடங்குவதும் தற்காலிகாமாக நிறுத்தபடுவதும் வாடிக்கையாக சில மாதங்களாக இருந்து வருகின்றது.இதில் பிரபலங்கள் , திரை நட்சத்திரங்கள் கணக்குகளும் அடங்கும். இந்நிலையில் பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிஷோரின் ட்விட்டர் கணக்கு முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிஷோர் பல படங்களில் குணசித்திர வேடங்களை ஏற்று கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் திறமை உள்ளவர். சமீபமாக இவர் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ , ‘காந்தாரா’ படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அவ்வப்போது பல சமூக பிரச்சனைகளுக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரின் விதிமுறைகளை மீறியதால் முடங்கியுள்ளதாக தகவல். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் எலன் மஸ்க் கணக்கை டேக் செய்து தங்களது ஆதங்கத்தையும் கேள்வியையும்  வெளிபடுத்தி பதிவேற்றி வருகின்றனர்.மக்களும் பிரபலங்களும் ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வரும் ஊடகமாக ட்விட்டர் இருந்து வருகிறது. சில பிரச்சனைகள் நடைபெற்று வந்தாலும் பல சமூக மாறுதல்களுக்கோ பல விஷயங்களுக்கு உதவியாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளினால் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது. இது ட்விட்டர் பயனாளர்களுக்கு அவதியாக இருப்பதே உண்மை .