இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. 

twitter bans kangana ranaut

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இரண்டாவது அலையில் மிகவும் அதிகமாக இருக்கும் இந்தநிலையில் ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இதற்கிடையே ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்தார் கங்கனா ரனாவத்.அந்தப் பதிவுகளில் எந்த விதத்திலும் அறிவியல் சார்ந்த புரிதல் இல்லை  என மருத்துவர்கள் உட்பட பலர் கங்கனா ரனாவத்-ன் பதிவுகளில் பதில் அளித்து வந்தார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான பதிவுகளை கங்கனா ரனாவத் பதிவு செய்ததால் பல டுவிட்டர் பயனாளிகள் அவரது பதிவுகளை ரிப்போர்ட் செய்தனர். 

இதனிடையே நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் மீண்டும் கங்கனா ரனாவத் தொடர்ந்து ஒரு மாநிலத்தை பற்றி சர்ச்சைக்குள்ளான  வன்முறையை தூண்டும் விதமாக பல பதிவுகளை தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வந்துள்ளார். இந்தப் பதிவுகள் அனைத்தும் உடனடியாக பல பேரால் ரிப்போர்ட் செய்யப்பட டுவிட்டர் நிர்வாகம் உடனடியாக கங்கனா ரனாவத் இன் டுவிட்டர் பக்கத்தை முடக்கியது. 

இதனால் கோபமடைந்த கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவிட்ட அதே  பதிவுகளையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது என  குறிப்பிட்டு மீண்டும் பகிர்ந்துள்ளார். 

கங்கனா ரனாவத் இன் ட்விட்டர் பக்கம் முடக்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல ஏற்கனவே இதே வருடம் அமேசான் பிரைம் என்ற ஊட்டி டிவி தளத்தில் வெளியான தாண்டவ் என்ற வெப்சீரிஸ்-ஐ  விமர்சித்து “Time to take their heads off”  என பதிவிட்டு தற்காலிகமாக அவரது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும்  மீண்டும் சர்ச்சைக்குள்ளான பதிவுகளின் மூலம் கடும் எதிர்ப்பு இருக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார் கங்கனா ரனாவத்.