சிறுது நேரம் டைம் ட்ராவல் செய்து 2007-ம் ஆண்டுக்கு செல்வோம். பெரிய குடும்பத்தில் இருந்து வந்த ஓர் கலைஞன் தனக்கென ஓர் ஆடியன்ஸை வர வைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இப்படிப்பட்ட ஓர் தரமான செய்கையை 27 ஏப்ரல் 2007-ல் செய்திருக்கிறார் ஓர் இயக்குனர். பொதுவாக இயக்குனர்களின் பெயர் பலகை வரும்போது தான் ரசிகர்கள் கொண்டாடுவர். ஆனால் படம் முடிந்தவுடனும் ப்ளூப்பர் காட்சிகளால் ரசிகர்களை திரையரங்கில் கட்டி போடும் வித்தை தெரிந்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கிய முதல் படம் தான் சென்னை 28.

Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team

கிரிக்கெட் பிரியர்கள் அனைவரையும் ஈர்த்தது இந்த படம். படம் முழுக்க கிரிக்கெட் மேட்ச்கள் விறுவிறுப்பாக இருந்தாலும், கதையில் சுறுசுறுப்பான பாத்திரங்களை வடிவமைத்திருப்பார் VP.

Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team

சுண்ணாம்பு காவாய்.. மன்னித்து கொள்ளவும் இந்த விசாலாட்சி தோட்டம் RA புரத்திற்கென அதிக எமோஷன் உண்டு. மளிகை கடை சீனு, ராக்கர்ஸ் ரகு, பேட் செண்டிமெண்ட் கோபி, ரொமான்டிக் ஹீரோ கார்த்திக், ஏரியா டான் குணா, ஆஸ்தான கீப்பர் அரவிந்த், பாசமிகு அண்ணன் பழனி, டாடிஸ் லிட்டில் பிரின்சஸ் செல்வி என பல கேரக்டர்களை கண் முன் கொண்டு நிறுத்தியிருப்பார். சலூன் கடை மனோகர் ... சாரி ஷார்க்ஸ் அணியின் மேனேஜரை குறிப்பிட மறந்துவிட்டோம்.

Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team

நார்மல் நோக்கியா போன் துவங்கி ஆப்பிள் ஐ-போன் பிலேலிஸ்டில் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் சவுண்ட் ட்ராக் பற்றி கூற வார்த்தைகள் ஏராளம்.

Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team Twelve Years Of Director Venkat Prabhus Chennai 28 Featuring Sharks Team

பில்டப் போதும் விஷயத்திற்கு வருவோம், இன்றோடு சென்னை 28 வெளியாகி 12 வருடங்கள் ஆகியது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படம். இதன் இரண்டாம் பாகம் வெளியான போது தான், நம் ஒரிஜினல் வயது தெரிந்தது. இன்னும் நேரமிருக்கிறது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு பெட் மேட்ச் விளையாடுங்கள். இந்நேரத்தில் சிறந்த என்டர்டெயினராக விளங்கி வரும் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் சென்னை 28 படக்குழுவினரை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.

இது எங்க ஏரியா உள்ள வராதா...