வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு உடனான நட்பு... மனம் திறந்த துணிவு தயாரிப்பாளர் போனி கபூரின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
By Anand S | Galatta | January 10, 2023 13:07 PM IST
தென்னிந்திய சினிமாவின் பலகோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களாக திகழும் தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் வெளியிடாக ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை பொங்கல் வெளியிடாக வரும் இந்த இரண்டு திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்களுக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித் குமார் மற்றும் தளபதி விஜயின் துணிவு மற்றும் வாரிசு ஆகிய படங்கள் ஒரே தினத்தில் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுக்கான டிக்கெடுகள் முன் பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பேசிய துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களுடனான நட்பு குறித்து கேட்டபோது,
“அவர் எனது நல்ல நண்பர் மேற்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு வெர்ஷனான வக்கீல் சாப் படத்தில் நானும் தில்ராஜ்வும் பார்ட்னர்களாக இருந்தோம். நாங்கள் இருவரும் இணைந்து தான் பவன் கல்யாண் உடைய அந்த படத்தை வழங்கினோம். தில் ராஜுவை எனது நெருக்கமானவராகவே வைத்திருக்கிறேன். அவர் மிகவும் நல்ல தயாரிப்பாளர் மற்றும் தேர்ந்த விநியோகஸ்தர் அவர் நிறைய திரைப்படங்கள் தயாரித்திருக்கிறார். திரைப்படங்கள் குறித்த நல்ல அறிவு அவருக்கு இருக்கிறது.” என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…