நடிகர் அஜித் நடிப்பில் ஆரவாரத்துடன் வெளியாகவிருக்கும்  ‘துணிவு’ படத்தின் இறுதிகட்ட விளம்பர பணி நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11 ம் தேதி இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வங்கி கொள்ளையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. பல இடங்களில் வெளிவரவிருக்கும் துணிவு படத்தை அஜித் ரசிகர்கள் அமோகமாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். மேலும் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கலாட்டா  பிளஸ் பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்ட துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் துணிவு படம் உருவானவிதம், தன் திரையனுபவம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.

அதில் எஞ்சினியர் படித்து சினிமா துறையை தேர்ந்தெடுப்பவர் குறித்து பேசிய அவர்,

“எஞ்சினியர் படித்து வெளியில் வருபவர்களுக்கு சினிமா ஈசியாகிறது. ஆரம்பத்தில் எனக்கு கஷ்டம் என்று நான் சினிமாவில் இருந்து ஒன்றரை வருடம் ஒதுங்கி இருந்தேன். அந்த இடைவெளியில் என்னால் சினிமாவை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. வெறும் கதை பண்ணி படம் பண்ணனும் நினைக்குறவங்களுக்கு சில சினிமா வரையறை கடினமாக இருக்கும். ஆனால் எஞ்சினியர் வாழ்வியல் வரையறையுடன் ஒத்து போவதினால் சினிமா வரையறையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆரம்பத்தில் ஒரு குழப்பம் சினிமா மேல் இருந்தாலும் சினிமாவை எளிதில் புரிந்து போக முடியும்.

என்று குறிப்பிட்டார். மேலும் இது போன்ற பல சுவாரஸ்யமான நிகழுவுகள் குறித்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்தும் தொடர்ந்து பேசினார். இயக்குனர் எச் வினோத் கலந்து கொண்டு பேசிய முழு வீடியோ இதோ..