ரசிகர்களுக்காக பதறிய தளபதி விஜய் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | October 07, 2020 16:27 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கத்தி படத்தின் வெற்றி விழாவிற்காக நெல்லையில் பிரம்மாண்ட விழா ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.விஜயை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.விஜயை பார்க்கும் ஆர்வத்தில் பலரும் கட்டவுட்டுகள் மீது ஏறி ஆபத்தான முறையில் இருந்தனர்.இதனை கவனித்த விஜய் அவர்களை உடனே கட்டவுட்டில் இருந்து இறங்கும் படி கையசைத்தார்,பின்னர் தனது உதவியாளரையும் அனுப்பி அவர்களை இறங்கவைத்தார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரலாக தற்போது இருந்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Good Morning ❤❤❤❤#Master @actorvijay pic.twitter.com/ZJbQXrY5ik
— Thalapathy Nisha 💞 (@Nisha35152464) October 7, 2020
The Perfect Stardom and Fandom Relationship ❤️!#Master @actorvijay pic.twitter.com/ZHgdfG6pCv
— ໐นt ໐f ¢໐ຖtr໐l ツ (@itsAravindDking) October 5, 2020
Anitha Sampath gets emotional | Suresh Chakravarthy | New Bigg Boss promo
07/10/2020 03:11 PM
Maari 2 villain Tovino Thomas hospitalised after shooting spot accident
07/10/2020 02:31 PM
Another big loss for Tamil cinema - film industry in mourning!
07/10/2020 01:22 PM