பல கோடி ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் ஃபேவரட் ஹீரோவான தளபதி விஜய் முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ  தயாரித்துள்ள வாரிசு படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட வருகிற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள வாரிசு படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அன்று முதலே இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வந்தன. இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் நேற்று ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்பட்டது.

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் வழக்கம் போல் தளபதி விஜயின் பேச்சு ஒட்டு மொத்த ரசிகர்களின் இதயங்களிலும் சென்று சேர்ந்தது. எப்போதும் போல “என் நெஞ்சில் குடியிருக்கும்” என தொடங்கிய தளபதி விஜய் "உங்க எல்லாருக்கும் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டிக்கிச்சு" என ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்தது, படக்குழுவினர் அனைவரையும் குறிப்பிட்டு தனக்கே உரித்தான பாணியில் பேசியது, ட்ரேட்மார்க் குட்டி ஸ்டோரியில் அண்ணன் தங்கை பாசத்தை குறிப்பிட்டு பேசியது, மேலும் ஒரு குட்டி ஸ்டோரியாக, “1990களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். ஆரம்பத்தில் போட்டியாளராக இருந்தார் பின்னர் சீரியஸான போட்டியாளராகிவிட்டார். அவர் மீதும் அவர் வெற்றி மீதும் இருக்கும் பயத்தினால் நானும் வளர ஆரம்பித்தேன். நான் சென்ற இடத்திற்கெல்லாம் அமரும் வந்து நின்றார். நான் இவ்வளவு தூரம் வளர்வதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார். அவரைத் தாண்ட வேண்டும் என்ற முயற்சியில் நான் போட்டி போட்டுக் கொண்டே இருந்தேன். அப்படி ஒரு போட்டியாளர் உங்களுக்கும் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் உருவான வருடம் 1992, அந்த போட்டியாளரின் பெயர் ஜோசஃப் விஜய். ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும் அனைவருக்கும் ஒரு போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் நீங்களாக தான் இருக்க வேண்டும்” என விஜய் பேசிய சமயத்தில் ரசிகர்கள் உற்சாகத்தை பொழிந்தனர். தொடர்ந்து ரஞ்சிதமே பாடல் பாடியபடியே நடனமாடிய போது மொத்த அரங்கமும் ஆரவாரத்தால் அதிர்ந்தது. தனது மாஸான பேச்சால் மக்களின் இதயங்களை கவர்ந்த தளபதி விஜய் வாரிசு இசை வெளியிட்டு விழாவில் பேசிய முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ இதோ…