மிக்ஜாம்: ‘கைகோர்ப்போம் துயர்துடைப்போம்!’- வெள்ள மீட்பு பணிகளில் இணைய மக்கள் இயக்கத்தினரை அழைத்த தளபதி விஜய்!

மிக்ஜாம் மீட்பு பணிகளில் தளபதி விஜய் மக்கள் இயக்கம்,Thalapathy vijay requests makkal iyakkham members for michaung cyclone rescue | Galatta

மிக் ஜாம் புயல் காரணமாக இடைவிடாத பெய்த அதீத கன மழை ஒட்டுமொத்த சென்னையிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளில் இணைந்து பணியாற்ற தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கலந்து கொள்ளுமாறு தளபதி விஜய் அழைப்பு கொடுத்து இருக்கிறார் இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் தளபதி விஜய்,

"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. 
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்"

என தெரிவித்திருக்கிறார். தளபதி விஜயின் அந்த முக்கிய பதிவு இதோ…

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம்…

— Vijay (@actorvijay) December 6, 2023

பொதுவாகவே பல சமூக நல பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் சமீப காலமாக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அவர்களது இந்த செயல்பாடுகளை வெகுவாக பாராட்டிய தளபதி விஜய் அதனை இடைவிடாது செய்யுமாறு அதற்கு வேண்டிய உதவிகளை கேட்டால் தான் உடனடியாக செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய போது கூட இதனை குறிப்பிட்டு மக்கள் இயக்க நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் பாராட்டிய தளபதி விஜய், இனி தமிழ்நாட்டில் எங்கே நல்ல காரியங்கள் நடந்தாலும் அதில் நமது பங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என்பது தனது ஆசை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாக்க அவர்களுக்கான மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து தன்னார்வலர்களாக பணியாற்ற வேண்டும் என விரும்புவதாக தளபதி விஜய் தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே இந்த மீட்ப பணிகளில் தளபதி விஜயின் மக்கள் இயக்கத்தினர் களமிறங்கிய நிலையில் தற்போது, தளபதி விஜய் அவர்களே அறிக்கை வெளியிட்டிருப்பதால் இன்னும் உற்சாகமாக களப்பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், செங்கல்பட்டு பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு

“தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, மிக்ஜாம் புயலால் #CycloneMichaung பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்.!
செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் #மிக்ஜாம் புயலால் கடும் மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளாக 150 குடும்பங்களுக்கு 5-கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், போர்வை, 200 நபர்களுக்கு ரொட்டி, பால், 5 நபர்களுக்கு ஸ்டவ் மற்றும் குடைகள் ஆகியவை வழங்கப்பட்டது.! இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர், தொண்டரணி தலைவர், மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவு இதோ…


 

தளபதி @actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,

மிக்ஜாம் புயலால் #CycloneMichaung பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்.!

#செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் @TVMIoffl சார்பாக,

சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் #மிக்ஜாம் புயலால் கடும் மழையின்… pic.twitter.com/rnlnmjeEdf

— Bussy Anand (@BussyAnand) December 5, 2023