தென்னிந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட நடிகராக பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் தனது நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் மற்றும் விக்ரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் இணைந்துள்ள தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாளன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளிவர இருக்கிறது.
தனது ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை நல்ல முறையில் வழிநடத்த தளபதி விஜய் கையில் எடுத்ததுதான் விஜய் மக்கள் இயக்கம். வெறும் ரசிகர்கள் மன்றம், நற்பணி மன்றம் என்பதை தாண்டி மக்களுக்கான மன்றங்களாக தளபதி விஜயின் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. எனவே அடிக்கடி சீரான இடைவெளியில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் ரசிகர்களையும் தளபதி விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட நிர்வாகிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது மக்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி பல சமூக நல திட்டங்களை செயல்படுத்தி வரும் விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானத்தை முன்னிறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தளபதி விஜய் குருதியகம் எனும் செயலியும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.
இதனிடையே கடந்த சில வாரங்களாக விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பலரும் தாமாக முன்வந்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து வந்தனர். தளபதி விஜயின் கவனத்தை இந்த செயல் வெகுவாக ஈர்த்தது. உடனே அந்த நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்த தளபதி விஜய் பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை கைவிட வேண்டாம் என்றும் தொடர்ந்து செயல்படுத்துமாறும் கேட்டுக் கொண்ட விஜய் இதற்காக என்ன உதவி தேவைப்பட்டாலும் தான் உதவ இருப்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து பல மக்கள் நலத்திட்டங்களை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவை அனைத்திற்கும் இதே போன்று ஒத்துழைப்பு கொடுக்குமாறும் தளபதி விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விலையில்லா விருந்தகம் திட்டத்தை செயல்படுத்திய உறுப்பினர்களை விஜய் நேரில் சந்தித்த சந்திப்பின் பிரத்யேக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ Youtube பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் தளபதி விஜயின் அந்த வீடியோ இதோ…