தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் மத்திய கிழக்கு நாடுகளில் டிக்கெட்டுகள் முன்பதிவில் பழைய ரெக்கார்டுகள் அனைத்தையும் முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜய் அடுத்ததாக முதல்முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜை உடன் தொடங்கப்பட்ட இந்த தளபதி 68 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் அனைத்தும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி இருக்கிறது லியோ திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்திருக்கிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தளபதி விஜயின் திரைப்படத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ படத்தை வெளியிடுவதற்கான பிரம்மாண்ட திட்டங்களை படக்குழுவினர் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரிலீஸுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே UKவில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியது. சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி ஸ்பெஷல் காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
முன்னதாக வெளிநாடுகளில் முன்பதிவிலேயே மிகப்பெரிய சாதனைகளை தொடங்கி இருக்கும் தளபதி விஜயின் இந்த லியோ திரைப்படம் தற்போது மற்றொரு அட்டகாசமான புதிய சாதனையை செய்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கிட்டத்தட்ட 175 இடங்களுக்கும் மேல் வெளிவரும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் முதல் 118 காட்சிகளுக்கு மட்டும் இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
Records rest in peace 😎
— Seven Screen Studio (@7screenstudio) October 16, 2023
Over 175 locations with more than 1,128 shows have collectively sold around 1.7 Lakhs+ tickets in the Middle East 💣
Sambavam urudhi 🔥#LeoFromOctober19#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay… pic.twitter.com/kekbeDGdu3