தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையாக தளபதி விஜயின் லியோ படம் 201 கோடிகளுக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் 24.2 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்திருப்பதாக வெளிநாடுகளில் லியோ திரைப்படத்தை வெளியிட்டு இருக்கும் PHARS FILM Co LLC நிறுவனம் இன்று நவம்பர் எட்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதுவரை தளபதி விஜயின் திரைப்படங்களிலேயே எந்த படங்களுக்கும் இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட ரிலீஸ் திட்டங்களை வகுத்த லியோ பட குழுவினர் அதை மிகச் சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.
அந்த வகையில் ரிலீசான முதல் நாளிலேயே இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிகபட்ச வசூல் செய்த படமாக லியோ திரைப்படம் 148.75 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை செய்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் வியக்க வைத்தது. அதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் கொண்டாடப்பட்ட லியோ திரைப்படம் முதல் வாரத்தில் 461 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமாவிலேயே முதல் வாரத்தில் அதிகபட்ச வசூல் செய்த படமாக மற்றொரு வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை மொத்தமாக 600 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதால் ஆரம்பம் முதலே லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருந்தன. தளபதி விஜயுடன் இணைந்து திரிஷா கதாநாயகியாக நடிக்க, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் என்ற லியோ திரைப்படத்தில் திரைக்கதை வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார், இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மிக வலிமையான தொழில்நுட்ப குழுவாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பாளர் ஃபிலோமின் ராஜ் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு மாஸ்டர்கள் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் கலை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோருடன் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோர் இந்த லியோ திரைப்படத்தை டெக்னிக்கலாக மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.
லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை முடித்த கையோடு தனது அடுத்த படமாக தளபதி 6 திரைப்படத்தில் தற்போது முழு கவனம் செலுத்தி வரும் தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்சமயம் தாய்லாந்து நாட்டில் தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது கூடுதல் தகவல்.
A moment to remember! #Leo Success Celebration … Token of appreciation to Phars Film from Thalapathy Vijay#leo running bloody sweet with a USD 24.2 million & counting worldwide! @7screenstudio @actorvijay pic.twitter.com/mm0H16Afu3
— Phars Film Co LLC (@PharsFilm) November 8, 2023